'ஷோ மேன் ஆஃப் இந்தியா' ஷங்கருக்கு இன்று 50வது பிறந்த நாள்.. சூப்பர் ஸ்டார் வாழ்த்து!

By Shankar

சென்னை: ராஜ் கபூர், சுபாஷ் கய்க்குப் பிறகு இந்தியாவின் ஷோமேன் என்று வர்ணிக்கப்படும் இயக்குநர் ஷங்கருக்கு இன்று பிறந்த நாள்.

இதனையொட்டி, அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் - நடிகைகள், தயாரிப்பாளர்கள் மற்றும் சக இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

எஸ் ஏ சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் முதன் முதலில் இயக்கிய படம் ஜென்டில்மேன். முதல் படத்தையே அவர் பிரமாண்டமாகத்தான் இயக்கினார். பிரமாண்ட வெற்றியைப் பெற்றார்.

ஜனரஞ்சக மன்னன்

ஜனரஞ்சக மன்னன்

ஒரு ஜனரஞ்சகப் படத்தை எப்படி இயக்குவது என்பதில் ஷங்கர் நிபுணத்துவம் பெற்றவர். இதுவரை அவர் இயக்கத்தில் தோல்விப் படம் என்று வந்தது இந்தியில் வெளியான நாயக் மட்டுமே. பாய்ஸ் படம் கடும் விமர்சனங்களால் தோல்வியைச் சந்தித்தது. அந்தப் படத்தை இப்போது வெளியிட்டிருந்தால் பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என அடிக்கடி சொல்வார் ஷங்கர்.

11 படங்கள்

11 படங்கள்

ஒரு இயக்குநராக இதுவரை அவர் 11 படங்களை இயக்கியுள்ளார். இப்போது அவர் விக்ரமை வைத்து இயக்கும் ஐ 12வது படமாகும்.

ரஜினிக்கு மெகா வெற்றிகள்

ரஜினிக்கு மெகா வெற்றிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து சிவாஜி - தி பாஸ், எந்திரன் - தி ரோபோ என இரு மெகா ஹிட் படங்களைத் தந்துள்ளார் ஷங்கர். இந்த இரு படங்களுமே ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படங்கள். தமிழ் சினிமா வர்த்தகத்தை உலக அளவில் பெரிய ரேஞ்சுக்குக் கொண்டு சென்றவை. இன்றும் இந்தியாவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை எந்திரனுக்குதான் (செபி அளித்த தகவலின்படி ரூ 375 கோடிகள்).

இந்தியாவின் ஷோ மேன்

இந்தியாவின் ஷோ மேன்

ஷங்கரின் படம் உருவாக்கத் திறமை, பிரமாண்ட படைப்புகள் இன்று அவரை இந்தியாவின் ஷோமேன் என்ற அடைமொழியைப் பெற்றுத் தந்துள்ளது. முன்பு பாலிவுட் ஜாம்பவான்கள் ராஜ்கபூர், சுபாஷ் கய் போன்றவர்களைத்தான் இப்படி அழைத்தனர். இன்று அந்த பாலிவுட்டே ஷங்கரை அப்படி அழைப்பது குறிப்பிடத்தக்கது (ஆனாலும் வட இந்திய சேனல்களுக்கு இதை ஒப்புக் கொள்ள மனமில்லை. தென்னிந்தியாவின் ஷோமேன் என அவை மாற்றிக் கொண்டது தனிக்கதை!).

பிறந்த நாள் - ரஜினி வாழ்த்து

பிறந்த நாள் - ரஜினி வாழ்த்து

இன்று ஷங்கருக்கு வயது 50. பொன்விழா காணும் அவருக்கு திரையுலகமே வாழ்த்து தெரிவித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் விக்ரம் உள்பட பலரும் வாழ்த்தியுள்ளனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தன் வாழ்த்துகளை ஷங்கருக்கு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X