twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜியில் வசனம் கொடுக்காத சங்கர்... விவேக் என்ன செய்தார் தெரியுமா?

    |

    சென்னை: இயக்குனர் சங்கர் தன்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலு ஆகிய மூவருடன் மட்டும்தான் தொடர்ந்து பணியாற்றினார்.

    தான் இயக்கிய ஆறாவது படமான பாய்ஸ் திரைப்படத்தில் தான் முதன் முதலாக நடிகர் விவேக்கை நடிக்க வைத்தார்.

    பாய்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து இயக்கிய அந்நியன் மற்றும் சிவாஜி திரைப்படங்களிலும் விவேக் நடித்திருந்தார்.

    பத்து தல படத்துக்காக வெயிட் போட்ட சிம்பு.. தாடி, தலைமுடின்னு ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே! பத்து தல படத்துக்காக வெயிட் போட்ட சிம்பு.. தாடி, தலைமுடின்னு ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே!

    பாய்ஸ் மங்களம்

    பாய்ஸ் மங்களம்

    கவுண்டமணி, செந்தில் மற்றும் வடிவேலு ஆகிய மூவருக்கும் கூட நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டும்தான் ஷங்கர் படங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் விவேக் பாய்ஸ் படத்தில் நடிக்கும் பொழுது நகைச்சுவை கதாபாத்திரத்தை தாண்டி முக்கிய குணச்சித்திர நடிகராகவும் அந்த கதாபாத்திரம் காட்டப்பட்டிருக்கும். அதேபோலத்தான் அந்நியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் அம்பியின் நண்பராகவும் படம் முழுக்க வந்திருப்பார். சிவாஜி படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க பயணம் செய்யும் கதாபாத்திரமும் அவருக்கு கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர் விவேக் இயக்குனர் சங்கர் படங்களை பற்றி முன்னதாக கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்சமயம் வைரலாகி வருகிறது.

    டாட்டா சுமோ

    டாட்டா சுமோ

    இயக்குனர் சங்கர் நகைச்சுவை காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். அப்படி இருக்கையில் பாய்ஸ் திரைப்படத்தில் நடிகர் விவேக்கின் அறிமுகக் காட்சி படப்பிடிப்பு நடக்கும் பொழுது இயக்குனரை ஜாலி மூடிற்கு கொண்டு வந்த விவேக் அதன் பின்னர் அவர் கொடுத்த வசனங்களுக்கு மேல் தன்னுடைய பஞ்ச் வசனங்களையும் ஆங்காங்கே பேசியிருந்தாராம். உதாரணத்திற்கு அந்தக் காலகட்டத்தில் டாட்டா சுமோ கார் ட்ரெண்டிங்கில் இருந்ததாம். அதனால் பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த தமனை பார்த்து இந்த டாட்டா சுமோவை ஓரமா பார்க் பண்ணுங்கடா என்கிற வசனத்தையும், பாய்ஸ் தங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது இருந்துட்டு போ என்கிற வசனத்தையும் ஆன் தி ஸ்பாட்டில் சொன்னதாகவும், அனைவரும் அதை ரசித்ததாகவும் விவேக் கூறியுள்ளார்.

    ரஜினியை தூக்கி சாப்பிட்ட விவேக்

    ரஜினியை தூக்கி சாப்பிட்ட விவேக்

    இதே போல சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஹாஸ்பிடலில் ரவுடிகளை ரஜினிகாந்த் சந்திக்கும் காட்சியில் நடிகர் விவேக்கிற்கு எந்த வசனமும் இல்லை என்று சங்கர் கூறிவிட்டாராம். பாய்ஸ், அன்னியன் ஏன் சிவாஜி படங்களில் கூட அனைத்து காட்சிகளிலும் தனக்கு வசனம் கொடுத்திருந்த சங்கர் இந்த காட்சிகள் நமக்கு ஒன்றுமே கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறது. ஏதாவது செய்ய வேண்டுமே என்ற யோசனையில் அதற்கு முந்தைய ஷாட்டில் கூலர்சை நெற்றியின் மீது இருவரும் வைத்து நடித்திருந்தார்களாம். அந்தக் கூலர்சை வைத்து ஏதாவது செய்யலாம் என்று இருவரும் ஹாஸ்பிடலிலிருந்து வெளியே வரும் பொழுது ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் கூலர்சை மாட்டிக் கொள்ள, விவேக் தன் தலையசைவின் மூலம் கூலர்சை ஸ்டைலாக மூக்கின் மேல் உக்கார வைத்து நடித்திருப்பார்.

    ரஜினியின் ரியாக்‌ஷன்

    ரஜினியின் ரியாக்‌ஷன்

    ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் அதை மானிட்டரில் பார்ப்பார்கள் இயக்குனர்களும் நடிகர்களும். அந்த வகையில் அந்த ஷாட்டை ரஜினி பார்க்கும் பொழுது விவேக் செய்ததை கவனித்துவிட்டாராம். விவேக்கை ஒரு கணம் பார்த்துவிட்டு இயக்குனர் சங்கரிடம் இந்த ஆள் கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும் சீன தூக்கிட்டாரு சார் என்று ரஜினிகாந்த் சொன்னதாக விவேக் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். அந்தக் காட்சி ஹை ஸ்பீடில் எடுக்கப்பட்டதால் ஸ்லோ மோஷனில் என்ன செய்தாலும் அது நன்கு மக்களிடம் சென்று ரீச் ஆகும் என்று அறிந்தேதான் விவேக் அப்படி நடித்ததாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    English summary
    Shankar who didn't give a Script in Sivaji, Do you know what Vivek did?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X