For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஷங்கரின் சம்பளம் ரூ. 5 கோடி!!

  By Staff
  |

  தமிழ் பட இயக்குனர்களிலேயே மிக அதிக சம்பளம் வாங்குவர் யார் தெரியுமா?.. இயக்குனர் ஷங்கர் தானாம். இப்போது இயக்கிமுடித்திருக்கும் அந்நியன் படத்துக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

  கேடி குஞ்சுமோனின் ஜென்டில்மேனில் மேலே வந்த ஷங்கர், தமிழில் திரும்பிப் பார்க்கவே இல்லை. மடமடவென மேலே வந்தவருக்குசருக்கலைத் தந்த ஒரே படம் பாய்ஸ் தான்.

  தமிழக இளைஞர்கள் எங்கேயோ போய் விட்டார்கள், அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் லேட்டஸ்ட் டிரண்டுடன்எடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு படம் பாய்ஸ் படத்தை எடுத்தார்.

  மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், ஷங்கருக்குத் தந்த சம்பளம் ரூ. 3.5 கோடியாம். ஆனால்,சுஜாதவையே இரட்டை அர்த்த வசனம் எழுத வைத்து, அந்தரங்க சமாச்சாரங்களை எல்லாம் திரையில் காட்டி அசிங்கப்படுத்தப்பட்டுஎடுக்கப்பட்ட அந்தர் படம் ரத்னத்துக்கு பெரும் நஷ்டத்தைத் தந்தது.

  இதன் பிறகு தான் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் மூலதனத்தில் மிகப் பெரிய செலவில் அந்நியனை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் ஷங்கரின் சம்பளம் ரூ. 5 கோடி...!!!. படம் படு கிராண்டாகவும், மிக வித்தியாசமாகவும் வந்துள்ளதால் இது மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்கிறார்கள்.


  அப்படி நடந்தால் ஷங்கரின் சம்பளம் மேலும் கூட அதிகரிக்கலாம்.

  சம்பளத்தில் ஷங்கருக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவர் த கிரேட் மணிரத்னம். வழக்கமாக சொந்தப் படத்தைத் தான் இயக்கி வருகிறார்.கவிதாலயாவுக்கும் தனது அண்ணன் ஜி.விக்கும் படம் எடுத்துத் தந்துள்ளார். அப்போதெல்லாம் ரூ. 1 கோடிக்கு கீழே தான் இவரது சம்பளம்இருந்தது.

  ஆனால், சமீபத்தில் மணியை வைத்து படம் எடுக்க அணுகிய ஒரு தயாரிப்பாளரிடம் அவர் காட்டியது 3 விரல்கள்.. அதாவது ரூ. 3 கோடி.

  இவர்களுக்கு அடுத்த இடத்தைப் பிடிப்பவர் சரண் அல்லது பாலா அல்லது தொடர் ஹிட் தரணியாக இருக்கலாம் என்று நீங்கள்நினைத்தால், அது தப்பு.

  அந்த இடத்தைப் பிடிப்பது விக்ரமன் தான். குடும்பப் பாங்கான படங்கள், குறைந்த செலவில் எடுத்து மிகப் பெரிய வசூலைத் தருவதுவிக்ரமனின் ஸ்டைல். அவரது படங்களுக்கு தமிழைப் போலவே தெலுங்கிலும் மிகப் பெரிய மார்க்கெட் உள்ளது.

  இதனால் தமிழில் படம் இயக்காவிட்டால், தெலுங்கில் பிஸியாக இருக்கிறார் என்று அர்த்தம்.

  இவர் ஒரு படத்துக்கு ரூ. 2 கோடி வாங்குகிறார். தெலுங்கு, தமிழில் ரூ. 2 கோடியில் நயா பைசா குறைக்காமல் வாங்கும் விக்ரமன், தமிழில்தனக்கு வாழ்வளித்த சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி என்றால் மட்டும் கொஞ்சம் ரேட்டை குறைக்கிறார்.

  விக்ரமனுக்கு அடுத்தபடியாகத் தான் பாலா, சரண், தரணி ஆகியோர் வருகிறார்கள். இவர்கள் ஒரு படத்துக்கு ரூ. 1 கோடி வாங்குகிறார்கள்.

  இவர்களது வரிசையில் தான் செல்வராகவன், ஹரி, லிங்குசாமி ஆகியோரும் இருக்கிறார்கள். இதில் செல்வாவின் சம்பளம் கூடிய சீக்கிரம்ஒன்னைத் தாண்டிவிடுமாம்.

  காதல் படத்தை இயக்கிய ஷங்கரின் அஸிஸ்டெண்ட் பாலாஜி சக்திவேல் இருக்கிறாரே.. அவர் ஒரு படத்தை இயக்க ரூ. 50 லட்சம் கேட்கஆரம்பித்துவிட்டார். ஒரே படத்தில் எங்கேயோ போவது என்பது இது தான்.

  கே.எஸ்.ரவிக்குமார், வாசு, சுரேஷ் கிருஷ்ணா போன்ற வெடரன்கள் விஷயத்தில் சம்பளம் என்று பார்த்தால், ரொம்ப பெரிதாக எல்லாம்இல்லை. பாபா ப்ளாப் படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷணாவுக்கு ரூ. 25 லட்சத்தை சம்பளமாகத் தந்தார் ரஜினி. சந்திரமுகியை இயக்கியவாசுவுக்கு அதைவிடக் கொஞ்சம் கூடக் கிடைத்ததாம். அவ்ளோ தான்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X