»   »  என்ன இது, சின்னப்புள்ளத்தனமா இருக்கு... ஷங்கர் மீண்டும் ஏதோ ஒரு புதிய முயற்சிக்குத் தயாராவதாகத் தெரிகிறது.இல்லாவிட்டால் வடிவேலுவை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்க முன் வருவாரா. அதுவும் வடிவேலுக்கு அதில் டபுள் ஆக்ட்வேறாம்.என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்கிறீர்களா? மேலே படிங்க..ரஜினி-ஷிரியாவை வைத்து சிவாஜி படத்தை இயக்கப் போகும் ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப் போகும்அடுத்த படத்தில் தான் வடிவேலுவை கதாநாயகனாக்க இருக்கிறார்.கடந்த ஆண்டில் தனது அஸிஸ்டெண்ட் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்த காதல் படம் மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து (ரூ. 80 லட்சத்தில் உருவாகி ரூ. 8.5 கோடி வசூல் ஈட்டியது) தனது புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம்லோ-பட்ஜெட்டில் மேலும் சில படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க இருக்கிறார்.பாலாஜி சக்திவேலையே வைத்து அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கும் ஷங்கர், பேரலலாக வடிவேலை ஹீரோவாக்கி ஒரு படத்தைஎடுக்கிறார்.ஒரு புதிய இயக்குனர் சொன்ன அருமையான கதையைக் கேட்ட ஷங்கர், அந்தப் பாத்திரத்துக்கு வடிவேலு தான் கரெக்டாக சூட்ஆவார் என்று கூறி அவரிடம் கால்ஷீட் கேட்டாராம்.உண்மையாத்தான் சொல்றீகளா ஏஞ் சாமி என்று முதலில் குழம்பினாராம் வடிவேலு.கவுண்டமணி உள்ளிட்ட பல ஜோக்கர்கள் ஹீரோவாக நடித்து மண்ணை டேஸ்ட் செய்ததையும், விவேக் ஹீரோவாக நடித்தசொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆளில்லாமல் பெட்டியில் குட்டி போடுவதையும் நினைவு கூர்ந்த வடிவேலு,நாம்பாட்டுக்கு காமெடியானவே வண்டிய ஓட்டிர்றேனே, என் ஐயா.. என்று தப்பப் பார்த்தராம்.ஆனால், வடிவேலுவை ஷங்கர் விடவில்லையாம். இது மிக வித்தியாசமான கதை. நீங்க கட்டாயம் நடிக்கனும் என்று சொல்லிஅட்வான்ஸை திணித்துவிட்டாராம்.ஏன்.. இப்படி.. என்று தனக்குத் தானே ரொம்பவும் குழம்பிப் போய் திரிகிறாராம் வடிவேலு.இதற்கிடையே சமீபத்தில் ரஜினியோடு மும்பைக்குப் பறந்த ஷங்கர் அங்கு வைத்து முன்னணி விளம்பர போட்டோகிராபர்களைவைத்து சிவாஜி படத்துக்கான ஸ்டில்ஸ் செஷனை நடத்தியிருக்கிறார்.இதற்கு போஸ் கொடுத்த ரஜினி அப்படியே ஓய்வுக்காக வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டாராம்.தான் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் பெரிய அளவில் விளம்பரம் செய்யாத ஏவிஎம், சிவாஜி படத்துக்காக பெரியளவில்விளம்பரங்கள் செய்யப் போகிறதாம். அதற்குத் தான் இந்த ஸ்டில் செஷனாம்.

என்ன இது, சின்னப்புள்ளத்தனமா இருக்கு... ஷங்கர் மீண்டும் ஏதோ ஒரு புதிய முயற்சிக்குத் தயாராவதாகத் தெரிகிறது.இல்லாவிட்டால் வடிவேலுவை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்க முன் வருவாரா. அதுவும் வடிவேலுக்கு அதில் டபுள் ஆக்ட்வேறாம்.என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்கிறீர்களா? மேலே படிங்க..ரஜினி-ஷிரியாவை வைத்து சிவாஜி படத்தை இயக்கப் போகும் ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப் போகும்அடுத்த படத்தில் தான் வடிவேலுவை கதாநாயகனாக்க இருக்கிறார்.கடந்த ஆண்டில் தனது அஸிஸ்டெண்ட் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்த காதல் படம் மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து (ரூ. 80 லட்சத்தில் உருவாகி ரூ. 8.5 கோடி வசூல் ஈட்டியது) தனது புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம்லோ-பட்ஜெட்டில் மேலும் சில படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க இருக்கிறார்.பாலாஜி சக்திவேலையே வைத்து அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கும் ஷங்கர், பேரலலாக வடிவேலை ஹீரோவாக்கி ஒரு படத்தைஎடுக்கிறார்.ஒரு புதிய இயக்குனர் சொன்ன அருமையான கதையைக் கேட்ட ஷங்கர், அந்தப் பாத்திரத்துக்கு வடிவேலு தான் கரெக்டாக சூட்ஆவார் என்று கூறி அவரிடம் கால்ஷீட் கேட்டாராம்.உண்மையாத்தான் சொல்றீகளா ஏஞ் சாமி என்று முதலில் குழம்பினாராம் வடிவேலு.கவுண்டமணி உள்ளிட்ட பல ஜோக்கர்கள் ஹீரோவாக நடித்து மண்ணை டேஸ்ட் செய்ததையும், விவேக் ஹீரோவாக நடித்தசொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆளில்லாமல் பெட்டியில் குட்டி போடுவதையும் நினைவு கூர்ந்த வடிவேலு,நாம்பாட்டுக்கு காமெடியானவே வண்டிய ஓட்டிர்றேனே, என் ஐயா.. என்று தப்பப் பார்த்தராம்.ஆனால், வடிவேலுவை ஷங்கர் விடவில்லையாம். இது மிக வித்தியாசமான கதை. நீங்க கட்டாயம் நடிக்கனும் என்று சொல்லிஅட்வான்ஸை திணித்துவிட்டாராம்.ஏன்.. இப்படி.. என்று தனக்குத் தானே ரொம்பவும் குழம்பிப் போய் திரிகிறாராம் வடிவேலு.இதற்கிடையே சமீபத்தில் ரஜினியோடு மும்பைக்குப் பறந்த ஷங்கர் அங்கு வைத்து முன்னணி விளம்பர போட்டோகிராபர்களைவைத்து சிவாஜி படத்துக்கான ஸ்டில்ஸ் செஷனை நடத்தியிருக்கிறார்.இதற்கு போஸ் கொடுத்த ரஜினி அப்படியே ஓய்வுக்காக வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டாராம்.தான் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் பெரிய அளவில் விளம்பரம் செய்யாத ஏவிஎம், சிவாஜி படத்துக்காக பெரியளவில்விளம்பரங்கள் செய்யப் போகிறதாம். அதற்குத் தான் இந்த ஸ்டில் செஷனாம்.

Subscribe to Oneindia Tamil

ஷங்கர் மீண்டும் ஏதோ ஒரு புதிய முயற்சிக்குத் தயாராவதாகத் தெரிகிறது.

இல்லாவிட்டால் வடிவேலுவை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்க முன் வருவாரா. அதுவும் வடிவேலுக்கு அதில் டபுள் ஆக்ட்வேறாம்.

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்கிறீர்களா? மேலே படிங்க..

ரஜினி-ஷிரியாவை வைத்து சிவாஜி படத்தை இயக்கப் போகும் ஷங்கர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப் போகும்அடுத்த படத்தில் தான் வடிவேலுவை கதாநாயகனாக்க இருக்கிறார்.

கடந்த ஆண்டில் தனது அஸிஸ்டெண்ட் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்த காதல் படம் மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து (ரூ. 80 லட்சத்தில் உருவாகி ரூ. 8.5 கோடி வசூல் ஈட்டியது) தனது புரொடக்ஷன் நிறுவனத்தின் மூலம்லோ-பட்ஜெட்டில் மேலும் சில படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்க இருக்கிறார்.


பாலாஜி சக்திவேலையே வைத்து அடுத்து ஒரு படத்தைத் தயாரிக்கும் ஷங்கர், பேரலலாக வடிவேலை ஹீரோவாக்கி ஒரு படத்தைஎடுக்கிறார்.

ஒரு புதிய இயக்குனர் சொன்ன அருமையான கதையைக் கேட்ட ஷங்கர், அந்தப் பாத்திரத்துக்கு வடிவேலு தான் கரெக்டாக சூட்ஆவார் என்று கூறி அவரிடம் கால்ஷீட் கேட்டாராம்.

உண்மையாத்தான் சொல்றீகளா ஏஞ் சாமி என்று முதலில் குழம்பினாராம் வடிவேலு.

கவுண்டமணி உள்ளிட்ட பல ஜோக்கர்கள் ஹீரோவாக நடித்து மண்ணை டேஸ்ட் செய்ததையும், விவேக் ஹீரோவாக நடித்தசொல்லி அடிப்பேன் படத்தை வாங்க ஆளில்லாமல் பெட்டியில் குட்டி போடுவதையும் நினைவு கூர்ந்த வடிவேலு,நாம்பாட்டுக்கு காமெடியானவே வண்டிய ஓட்டிர்றேனே, என் ஐயா.. என்று தப்பப் பார்த்தராம்.


ஆனால், வடிவேலுவை ஷங்கர் விடவில்லையாம். இது மிக வித்தியாசமான கதை. நீங்க கட்டாயம் நடிக்கனும் என்று சொல்லிஅட்வான்ஸை திணித்துவிட்டாராம்.

ஏன்.. இப்படி.. என்று தனக்குத் தானே ரொம்பவும் குழம்பிப் போய் திரிகிறாராம் வடிவேலு.

இதற்கிடையே சமீபத்தில் ரஜினியோடு மும்பைக்குப் பறந்த ஷங்கர் அங்கு வைத்து முன்னணி விளம்பர போட்டோகிராபர்களைவைத்து சிவாஜி படத்துக்கான ஸ்டில்ஸ் செஷனை நடத்தியிருக்கிறார்.

இதற்கு போஸ் கொடுத்த ரஜினி அப்படியே ஓய்வுக்காக வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டாராம்.

தான் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் பெரிய அளவில் விளம்பரம் செய்யாத ஏவிஎம், சிவாஜி படத்துக்காக பெரியளவில்விளம்பரங்கள் செய்யப் போகிறதாம். அதற்குத் தான் இந்த ஸ்டில் செஷனாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil