ஸ்பெஷல்ஸ்
ஷர்மிலி ரொம்பவும் சோகத்திலும் கோபத்திலும் இருக்கிறார்.
எனக்கு என்ன குறைச்சல், அழகில்லையா, நடிக்கத் தெரியலையா, என்னை ஏன் தமிழ் சினிமாவில் ஒதுக்கிறார்கள் என்று புலம்பித் தள்ளுகிறார்.
சமீபத்தில் ஒரு பி.ஆர்.ஓ. பார்ட்டியிடம் இதே போல ஷர்மிலி புலம்ப, அழகெல்லாம் ஓ.கே., அதைக் காட்டனும்ம் இல்ல என்று அவர் ஐடியா தந்தாராம்.
இதையடுத்து கிளாமராக பல ஸ்டில்களை எடுத்து ஆல்பமாகப் போட்டுக் கொண்டு, எப்படியும் நடிக்கத் தயார் என்ற அறிவிப்புடன் கோடம்பாக்கம் சினிமா கம்பெனிகள் ஒன்றுவிடாமல் ஏறி, இறங்கி தயாரிப்பாளர்களை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்.
தயாரிப்பாளர்களோடு, இளம் இயக்குனர்கள்- ஹீரோக்களையும் சூட்டிங் ஸ்பாட்டுக்கே விரட்டித் சென்று, சந்தித்து சான்ஸ் கேட்டு வருகிறார்.
இதுவரை இந்த முயற்சிக்குப் பலன் ஏதும் கிடைக்கவில்லை என்பது தான் துக்கடா செய்தி.
More from Filmibeat
ankita ar rahman baba bhoomika boomika cinema dhool ankitha directors iilayaraja kavya madhavan krrala movies music singers songs vikram


Click it and Unblock the Notifications











