»   »  பிக் பீ க்குக்குப் பதில் கிங் கான்

பிக் பீ க்குக்குப் பதில் கிங் கான்

Subscribe to Oneindia Tamil

அமிதாப் பச்சன் நடத்தி வந்த பிரபலமான கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை இனிமேல் பாலிவுட்டின்லேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடத்தவுள்ளார்.

ஸ்டார் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. அமிதாப்பச்சன் நடத்தி வந்தஇந்த நிகழ்ச்சிக்கு குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர். மிகவும் பிரபலமானதால் 2வதுஅத்தியாயத்தையும் ஸ்டார் டிவி அமிதாப்பை வைத்து நடத்தியது.

தற்போது அமிதாப் பச்சனின் உடல் நலம் ஒத்துழைக்காததால், கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியிலிருந்தஅவர் விலகி விட்டார். இதையடுத்து புத்தம் புதுப் பொலிவுடன் இன்னொரு பிரபலத்தை வைத்து இந்நிகழ்ச்சியைதொடர ஸ்டார் டிவி நிறுவனம் முடிவு செய்தது.

அமிதாப்புக்குப் பதில் ஸ்டார் தேர்வு செய்த பிரபலம் ஷாருக் கான். கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியைநடத்த வேண்டும் என ஷாருக்கை ஸ்டார் அணுகியபோது அவருக்கு ஆச்சரியமாகிப் போனதாம்.

பிக் பீ நடத்திய இந்த நிகழ்ச்சியை நடத்துவதில் தனக்கு பெருமை என்று கூறிய ஷாருக், ஆனால் அமிதாப்ஏற்படுத்தி வைத்துள்ள இமேஜ் சரிந்து விடாமல் கொண்டு செல்வது பெரும் வேலையாக இருக்கும் எனவும்கூறியுள்ளார்.

ஷாருக் கான் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது குறித்து ஸ்டார் நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரியான சமீர் நாயர் கூறுகையில், குரோர்பதி நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த இயலாது என்றுஅமிதாப் தெரிவித்தபோது அதை நாங்கள் மிகவும் கண்ணியத்தோடு ஏற்றுக் கொண்டோம். அமிதாப் முடிவைநாங்கள் மதிக்கிறோம்.

குரோர்பதி நிகழ்ச்சி, இந்தியாவிலேயே அதிகம் பார்க்கப்பட்ட டிவி நிகழ்ச்சி என்ற பெருமை கிடைத்ததற்குஅமிதாப்தான் முழுக் காரணம். அதற்காக அவருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். அப்பொறுப்பை ஷாருக்கிடம் ஒப்படைத்துள்ளோம்.கடந்த ஒரு மாதமாக இதுதொடர்பாக ஷாருக்கிடம் பேசி வருகிறோம். அவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்துவழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

டிசம்பர் மாதக் கடைசியில் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. ஜனவரி இறுதியில் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு வரும்என்றார் நாயர்.

குரோர்பதியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு குறித்து ஷாருக் தெரிவிக்கையில், ஸ்டார் நிறுவனம் குரோர்பதிதொடர்பாக என்னை அணுகியபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அமிதாப் பச்சன் நடத்தியபோது நான்கூடஅதில் பங்கு கொண்டுள்ளேன். அப்போது நானே இந்த நிகழ்ச்சியை நடத்துவேன் என்று எனக்கு தெரியாது.

அமிதாப் பச்சன் போன்ற ஜாம்பாவன் நடத்திய இந்த நிகழ்ச்சியை நான் நடத்தப் போகிறேன் என்பது பரவசமாகஇருந்தாலும் அமிதாப் ஏற்படுத்தி வைத்துள்ள இமேஜுக்கு பாதகம் இல்லாமல் செய்ய வேண்டுமே என்ற பயம்கூடவே வந்து விட்டது.

தொலைக்காட்சியில்தான் எனது நடிப்புலக வாழ்க்கை தொடங்கியது. இப்போது அதே தொலைக்காட்சி மூலம்எண்ணற்ற ரசிகர்களை நான் சந்திக்கப் போகிறேன் என்பது சந்தோஷமாக உள்ளது என்றார் ஷாருக்.

குரோர்பதியை அமிதாப் நடத்த இயலாததால் அந்த நிகழ்ச்சிக்குப் பதிலாக அமிதாப்பை வைத்தே ஹூ வான்ட்ஸ்டு பி எ மில்லியனர் என்ற புதிய நிகழ்ச்சியை நடத்த ஸ்டார் திட்டமிட்டிருந்தது. ஆனால் அது சரிவரவில்லை.இதையடுத்தே ஷாருக்கை வைத்து குரோர்பதியை தொடர ஸ்டார் முடிவு செய்ததாம்.

இந்தித் திரையுலகில் அமிதாப்புக்கு அடுத்து இப்போது சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ஷாருக்தான். கிங் கான்என்றுதான் அவரை ரசிகர்கள் அழைக்கிறார்கள். இப்போது அமிதாப்புக்கு 2வது இன்னிங்ஸை ஏற்படுத்திக்கொடுத்த குரோர்பதி நிகழ்ச்சியை ஷாருக் தொகுத்து வழங்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil