»   »  ஹாக்கிக்காக ஒரு படம்!!!

ஹாக்கிக்காக ஒரு படம்!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை பெருமைப்படுத்தும் வகையில், ஷாருக் கான் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் சக் தே இந்தியா.

இந்தியாவுக்கு ஆங்கிலேயர்கள் மூலம் வந்தேறியயான கிரிக்கெட்டுக்குத்தான் இப்போது நம் ஊரில் மதிப்பு. சாப்பிடுகிறார்களோ இல்லையா, கிரிக்கெட் பார்க்காவிட்டால் மண்டை காய்ந்து போய் விடும் நம்மில் பலருக்கு.

இந்தியா தொடர்ந்து தோற்றாலும், இந்திய வீரர்கள் தொடர்ந்து சொதப்பினாலும், அப்போதைக்கு எதிர்ப்பைக் காட்டி விட்டு மறுபடியும் கிரிக்கெட் மீது பாசத்தைப் பொழிவது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வழக்கம்.

6 மாதத்துக்கு ஒரு தடவை சச்சின் டக்-அவுட் ஆகாமல் விளையாடிவிட்டால் போதும், அடுத்த 6 மாதத்துக்கு அவரை பார்ட்டிக் கொண்டிருப்பார்கள். (அவர் வெளிநாட்டில் பரிசாகக் கிடைக்கும் காருக்கு சுங்க வரி கூட கட்டாமல் இந்தியாவுக்குள் கொண்டு வந்து தேசப் பற்றை காட்டுவார்)

ஆனால் அதேசமயம், ஹாக்கி, கபடி போன்ற உடல் திறமைக்கு சவால் விடும் இந்தியாவின் பிரத்யேக விளையாட்டுக்கள் குறித்து நமது விளையாட்டு ஆர்வலர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. கிரிக்கெட் மோகம் பிடித்துத் திரியும் இந்தியர்களால், இந்த விளையாட்டுக்கள் சுத்தமாக பொலிவிழந்து கிடக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக விளங்கும் ஹாக்கியைப் பெருமைப்படுத்தும் வகையில் பிரபல தயாரிப்பாளர் யாஷ் ராஜ் தயாரித்துள்ள படம்தான் சக் தே இந்தியா.

இந்தப் படத்தின் உலகளாவிய ரிலீஸுக்கு யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சலெஸ் நகரங்களில் நடைபெறும் இந்திய மற்றும் இந்திய கலாச்சார விழாவில் சக் டே இந்தியா திரையிடப்படுகிறது.

உலகளவில் இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையிடப்படவுள்ளது. ஆகஸ்ட் 9ம் தேதி லண்டனில் இப்படம் திரைக்கு வருகிறது. அங்குள்ள சோமர்செட் ஹவுஸில் படத்தை திரையிடவுள்ளனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், இப்படத்தில் ஹாக்கி பயிற்சியாளராக நடித்துள்ளார்.

கவனிக்கப்படாத திறமையுடன் கூடிய இளம் சிறுமிகளை தேர்வு செய்து அவர்களை உலகமே வியந்து பாராட்டும் வகையிலான ஹாக்கி அணியாக மாற்றுகிறார் ஷாருக் கான்.

லண்டன் விழாவில் ஷாருக் கானும் பங்கேற்கிறார். லண்டன் மேயர் கென் லிவிங்க்ஸ்டோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

ஆகஸ்ட் 10ம் தேதி லாஸ் ஏஞ்செலஸ் நகரில் இப்படம் திரையிடப்படுகிறது.

கிரிக்கெட் ரசிகர்களும் இந்தப் படத்தை பார்க்கலாம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil