»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஷாவ்யா என்றொரு கவர்ச்சித் தீ நடித்து வரும் தீண்டத் தீண்ட படம் முடிவடைந்துவிட்டதாம். பொங்கலுக்குமுன்னதாகவே ரிலீஸ் செய்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

படத்தில் எல்லோருமே புதுமுகம் என்பதால்வடிவேலுவின் காமெடி பார்ட்டை நீட்டித்துவிட்டார்களாம்.

இந்தப் படம் இன்னும் வெளிவரலாவிட்டாலும் ஷாவ்யா கையில் இப்போதே 2 படங்கள் இருக்கின்றனவாம்.

படுகவர்ச்சியான ரோல்களில் நடிக்க சம்மதமும் சொல்லி, அட்வான்ஸையும் வாங்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்ஷாவ்யா.

கத்திரி விழும் ஆஞ்சநேயா

ஆஞ்சநேயா படம் ரொம்ப நீளமாக இருப்பதாலும் கதையும் போர் அடிப்பதாலும் ஆபரேட்டர் உள்படதியேட்டரில் பலரும் ஓவர் குறட்டை விடுகிறார்களாம்.

இதையடுத்து பல தியேட்டர்களில் அவர்களாகவேஆங்காங்கே கத்திரியை எடுத்து படத்தை வெட்டித் தள்ளி வருகிறார்கள்.

இதனால் கதையின் தொடர்ச்சியே ஒட்டுமொத்தமாக அறுபட்டுவிட்டதாக அஜீத்துக்கு தகவல் வர, அவரே ஆள்அனுப்பி எல்லா தியேட்டர்களிலும் சுமார் 2,500 அடியை வெட்டி வருகிறாராம்.

தியேட்டர்காரர்கள் இஷ்டத்துக்குவெட்டுவதால் கதைக்கு பாதிப்பு வருவதால், அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடாம்.

Please Wait while comments are loading...