»   »  பாவனா இடத்தில் ஷீலா!

பாவனா இடத்தில் ஷீலா!

Subscribe to Oneindia Tamil

சித்திரம் பேசுதடியின் தெலுங்குப் பதிப்பில் நடிக்க பாவனா மறுத்து விட்டதால்அவருக்குப் பதில் ஷீலா நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாவனா, தமிழுக்கு வந்தபடம் சித்திரம் பேசுதடி. முதல் படம் ஓஹோவென ஓடியதால் பாவனாவும் லீடிங்நாயகியாகி விட்டார்.

இப்போது நிற்க நேரமில்லாமல், உட்கார யோகம் இல்லாமல் ஓடோடி நடித்துவருகிறார். சித்திரம் பேசுதடி படத்தை இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர்.

ரஜினியின் தோஸ்த் மோகன்பாபுவின் மகன் மனோஜ் பாபுதான் ஹீரோ. இவரதுஅண்ணன் மகேஷ்பாபு இப்போது தெலுங்கில் முன்னணி நடிகர். அவரது வழியில்மனோஜையும் முன்னணி நடிகராக்க அப்பா மோகன்பாபு உறுதி பூண்டுள்ளார்.

மனோஜ்பாபு நடிக்கும் சித்திரம் பேசுதடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தமிழ்ஒரிஜினலின் நாயகி பாவனாவை கேட்டுள்ளனர். அவரோ மணவாடுகளை நினைத்துப்பயந்தாரோ என்னவோ, ஸாரி பாவா, கால்ஷீட் லேது என்று கூறி விட்டாராம்.

இதையடுத்து பாவனாவை விட்டு விட்டு இப்போது ஷீலாவுக்கு மாறியுள்ளனர்.இளவட்டம் நாயகி ஷீலாவும் இப்போது தமிழ், தெலுங்கு, மலாையளம் என படுபிசியாக இருக்கிறார்.

சித்திரம் பேசுதடி தெலுங்கு ரீமேக் வாய்ப்பு வந்ததால் சில படங்களின் கால்ஷீட்டைஒத்தி வைத்து விட்டு இப்படத்திற்குக் கொடுத்துள்ளாராம்.

சித்திரம் பேசுதடியின் ரீமேக்கை சூரிய கிரண் இயக்கவுள்ளார். இவரும் ஒரு காலத்தில்குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்தவர்தான். இப்போது இயக்குனராகிவிட்டார்.

தமிழ் சித்திரம் பேசுதடியில், பாவனாவுக்கு கிளாமர் சைடு அவ்வளவாக கிடையாது.ஆனால் தெலுங்கு ரீமேக்கில் அப்படி இருக்க முடியுமா.? அதுவும் ஷீலா மாதி>யானஒரு ஜீலேபியை வைத்துக் கொண்டு? எனவே தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினுக்குகண்ணாபின்னா கட்சிகளை வைத்துள்ளனராம்.

சித்திரம் பேசுதடியில் படு பேமசான வாள மீனு பாடல் அப்படியே தெலுங்குபதிப்பிலும் இடம் பெறுகிறது. கானா உலகநாதனையே தெலுங்கிலும் பாட வைத்துஆட வைக்க பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

அதே போல மாளவிகாவின் ஆட்டத்துக்கு செமத்தியான ஒரு குத்து சுந்தரியைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

கலக்குங்கலு!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil