»   »  இன வெறியர்களிடம் சிக்கிய ஷில்பா!

இன வெறியர்களிடம் சிக்கிய ஷில்பா!

Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்தின் சேனல்-4 தொலைக்காட்சியின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பாலிவுட் ஸ்டார்ஷில்பா ஷெட்டிக்கு எதிராக இன துவேஷ வார்த்தைகளைக் கூறி சக போட்டியாளர்கள் சிலர்அவமானப்படுத்தினர்.

இங்கிலாந்தின் சேனல் -4 என்ற தனியார் தொலைக்காட்சி பிக் பிரதர் என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை நடத்திவருகிறது. இந்த நிகழ்ச்சியில் உலக அளவில் பிரபலமானவர்களை தேர்ந்தெடுத்து ஒரே வீட்டில் தங்க வைத்துஅவர்களது அன்றாட செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

இந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி பங்கேற்றுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3 கோடி (முதல் 2 கோடிஎன்றார்கள்) சம்பளமாக கொடுக்கப்படுகிறது. பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன்உள்ளிட்ட மொத்தம் 8 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஷில்பா ஷெட்டிதான் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரைஇன வெறி துவேஷத்தால் சக போட்டியாளர்கள் சிலர் கேவமாக பேசியும், திட்டியும் வருவது பெரும் சர்ச்சைகிளம்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் இந்தியர்கள் இதுதொடர்பாக இங்கிலாந்தின் ஒளிபரப்பு கண்காணிப்புநிறுவனமான ஆஃப்காம் அமைப்புக்கு புகார்களை அனுப்பி வருகின்றனர்.

200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக ஆஃப்காம் தெரிவித்துள்ளது. இந்தப் புகார்களை விசாரித்த அந்தஅமைப்பு ஷில்பா ஷெட்டி அவமானப்படுத்தப்பட்டது குறித்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கைஎடுககுமாறு சேனல் 4 நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஷில்பா ஷெட்டியை அவமானப்படுத்தியதற்கு ஆசிய வானொலி நிலையங்களும், பல்வேறு இணையதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியர் என்றாலே இப்படித்தான் என்பது போன்ற வார்த்தையைச் சொல்லி ஷில்பா ஷெட்டியை சகபோட்டியாளர்கள் கேவலமாக விமர்சித்துள்ளனர். பிரசுரிக்கவே முடியாத சில வார்த்தைகளையும் கூறிஷில்பாவை அவர்கள் திட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகேவ ஷில்பாவை அவர்கள் சரமாரியாக கிண்டலும், கேலியும் செய்து பேசி வருகின்றனர்.ஷில்பாவை சீண்டி வருபவர்கள் அனைவருமே பெண்கள். டேணியல் லாய்டு என்ற முன்னாள் இங்கிலாந்துஅழகி ஷில்பாவை நாய் என்று கூறித் திட்டியதாக புகார் எழுந்துள்ளது.

ஜேட் கூடி என்ற இன்னொரு பெண், ஷில்பாவை அசிங்கமாகத் திட்டியுள்ளார். அவரது மகளான ஜேட்,ஷில்பாவின் பின் பக்கம் குறித்து அசிங்கமாக விமர்சித்துள்ளார்.

ஷில்பா சமைத்த சிக்கன் சாப்பாட்டை சாப்பிட மறுத்த ஜோ மியாரா என்ற பெண், அது அரை வேக்காடாகஉள்ளதாக கூறி கண்டித்தார்.

இவர்களின் இந்த இன வெறி சீண்டலால் அதிர்ந்து போன ஷில்பா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போதுஜாக்சனின் சகோதரான ஜெர்மைன் ஜாக்சன் தான் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி ஷில்பாவைஅமைதிப்படுத்தியுள்ளார்.

ஷில்பாவை அவமானப்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது பொம்பளைங்க சண்டை,இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று சேனல் 4 நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் பிக் பிரதர்நிகழ்ச்சியில் இனவெறிக்கு இடமில்லை, அதை அனுமதிக்க மாட்டோம். இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறோம் என்று அந்த நிறுவனம் விளக்கியுள்ளது.

திங்கள்கிழமை பிக் பிரதர் நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் அவரசமாக கூடி ஷில்பா விவகாரம் தொடர்பாக தீவரஆலோசனை நடத்தினர். ஷில்பா அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக தங்களுக்கு வந்துள்ள புகார்களைதீவிரமாக விசாரித்து தவறு செய்தவர்களை போட்டியிலிருந்து வெளியேற்றுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜேட் கூடியை போட்டியில் இருந்து நீக்கியுள்ளது சேனல் 4.

வெள்ளையர்களே, புத்தியையும் அதே கலரில் வைத்துக் கொள்ளுங்களேன்!...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil