»   »  விஸ்வரூபம் எடுக்கும் ஷில்பா விவகாரம்

விஸ்வரூபம் எடுக்கும் ஷில்பா விவகாரம்

Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் நிகழ்ச்சியில் இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி வார்த்தைகளால்அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக வி>வாக விசாரணை நடத்த வேண்டும் எனஇங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கோ>க்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டிபங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்றுள்ள ஜேட் கூடி என்ற செக்ஸ்நடிகையும் அவரது தாயாரான ஜேக்கி கூடியும் ஷில்பாவை நாய் என்று திட்டியும்,கேவலமாக விமர்சித்தும், அவர் தயாரித்த உண்வை சாப்பிட மறுத்து கேலி செய்தும்அவமானப்படுத்தினர்.

அவரை இந்தியர் என்று சுட்டிக் காட்டி இனவெறி வார்த்தைகளால்அவமானப்படுத்தினர். இதைக் கண்டித்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்குஆயிரக்கணக்கான கண்டன புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஷில்பா அவமானப்படுத்தப்பட்ட விவகாரத்திற்கு மத்திய அரசும் கண்டனம்தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு இங்கிலாந்துஅரசை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில்,இந்த சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இனவெறியை எப்போதுமேஇந்தியா ஆத>த்ததில்லை.

இதுதொடர்பாக விரிவான அறிக்கை தருமாறு லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்குஉத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.இதை மத்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது. இனவெறி எந்த ரூபத்தில் வந்தாலும்அதை அனுமதிக்க முடியாது என்றார் சர்மா.

டோனி பிளேர் கண்டனம்:

ஷில்பா விவகாரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் நேற்று பிரச்சினையைக்கிளப்பியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. கீத் வாஸ் இதுதொடர்பாகதீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து பேசினார். அவர் பேசுகையில்,

ஷில்பா ஷெட்டியுடன் தங்கியுள்ள போட்டியாளர்கள் தெரிவித்த கருத்துக்கள்இனவெறியின் வெளிப்பாடு. இது கடும் கண்டனத்துக்குரியது. இதை கடுமையாககண்டிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், இந்தநிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. இருந்தாலும், இனவெறியை இங்கிலாந்து அரசுஅனுமதிக்காது. இனவெறி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதுவன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

சேனல் 4 மழுப்பல்:

ஷில்பா விவகாரம் பெரிதாகி வரும் நிலையில், அவர் இனவெறி வார்த்தைகளால்அவமானப்படுத்தப்படவில்லை என்று சேனல் 4 நிறுவனம் மழுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், இனவெறியை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். ஷில்பா ஷெட்டி இனவெறி வார்த்தைகளால் புண்படுத்தப்படவில்லைஎன்று நாங்கள் கருதுகிறோம்.

இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil