»   »  ஷில்பா ஷெட்டி அடித்த பல்டி!

ஷில்பா ஷெட்டி அடித்த பல்டி!

Subscribe to Oneindia Tamil

நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறி வார்த்தைகளால் விமர்சித்த இங்கிலாந்துப்பெண்மணி ஜேட் கூடியும் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறார். இதுதொடர்பாக இன்றுநேயர்களிடையே கருத்துக் கணிப்பை நடத்துகிறது பிக் பிரதர் நிகழ்ச்சியை நடத்திவரும் சேனல் 4 நிறுவனம்.

இங்கிலாந்தின் சேனல் 4 நிறுவனம் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் ஷில்பாஷெட்டி கலந்து கொண்டுள்ளார். ஆனால் நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நாட்களிலேயேஅவருடன் கலந்து கொண்டுள்ள சக பெண் போட்டியாளர்களுக்கும், ஷில்பாவுக்கும்இடைேய பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

ஷில்பாவை ரவுண்டு கட்டி அந்தப் பெண்கள் விமர்சித்து வருகின்றனர். நாய் என்றும்கூட திட்டி தங்களது இனவெறியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஜேக்கி கூடிஎன்ற பெண்தான் ஷில்பாவை மிகக் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர்நீக்கப்பட்டார்.

ஜேக்கி கூடியின் மகள் ஜேக் கூடியும் ஷில்பாவை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் அவரது பேச்சுக்களைத் தாங்க முடியாமலல் ஷில்பா கண்ணீர் விட்டுஅழுதார். இதனால் இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இனவெறி விமர்சனத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஷில்பாவுக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்தில் டிவி நிகழ்சசிகளைக் கண்காணிக்கும்ஆஃப்காம் அமைப்புக்கு ஆயிரக்கணக்கான கண்டன இமெயில்கள் வந்து குவிந்துகொண்டுள்ளன.

இந்த நிலையில் ஷில்பா அல்லது ஜேட் கூடி ஆகியோரில் ஒருவரை வெளியேற்றிபிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளபெண் போட்டியாளர்கள் சேனல் 4 நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதைஅந்த நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து இன்று இதுதொடர்பாக நேயர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துகிறதுசேனல் 4 நிறுவனம். ஷில்பாவை விட ஜேட் கூடிக்குத்தான் நேயர்களின் அதிருப்திஅதிகம் உள்ளதால் அவர்தான் நிகழ்ச்சியிலிருந்து விரட்டப்படும் வாய்ப்பு பிரகாசமாகஉள்ளது.

தொலைபேசி மூலம் இந்த கருத்துக் கணிப்பு நடைபெறுகிறது. ஷில்பா, ஜேட்ஆகியோரில் யார் நீடிக்க வேண்டும் என்பதை நேயர்கள் சேனல் 4 நிறுவனத்துக்குத்தெரிவிக்கலாம். அதில் யார் குறைவாக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்வெளியேற்றப்படுவார்.

விளம்பரதாரர் விலகல்:

இந்த சர்ச்சை காரணமாக பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்து வந்தஇங்கிலாந்தைச் சேர்ந்த கார்ஃபோன் வியர்ஹவுஸ் நிறுவனம் அதிலிருந்து விலகிவிட்டது.

உடனடியாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள தங்களது விளம்பங்கள அகற்றிவிடுமாறு சேனல் 4 நிறுவனத்தை அது கேட்டுக் கொண்டுள்ளது.

மன்னிப்பு கேட்ட ஜேட்:

இந்த நிலையில், தான் இனவெறியை வெளிப்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும்தான் பேசியது அந்தத் தொணியில் இருநந்தால், இந்தியர்கள் மனம் புண்படும்படிஇருந்தால் அதற்காக தான் மன்னிப்பு கேட்பதாக ஜேட் கூடி கூறியுள்ளார்.

ஷில்பா திடீர் பல்டி:

அதேசமயம், ஜேட் கூடியோ அல்லது வேறு யாருமோ தன்னை நோக்கி இனவெறிகருத்துக்களைத் தெரிவிக்கவில்லை என்று ஷில்பா ஷெட்டி பல்டி அடித்துள்ளார்.

மேலும் தான் அவமானப்படுத்தப்படவில்லை என்றும் எங்களுக்குள் சாதாரண கருத்துவேறுபாடுதான் ஏற்பட்டது என்றும் ஷில்பா உல்டா அடித்துள்ளார்.

இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அப்படி கேட்பதாகஇருந்தாலும் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று சேனல் 4 நிறுவனத்திடம் அவர்கூறியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்ற நோக்கில்தான் ஷில்பாஅவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

முதல் முறையாக நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஷில்பாவிடம்வம்புக்குப் போயுள்ளார் ஜேட் கூடி. நீ இளவரசியாக இருக்கலாம். அதற்காக நான்உனக்கு மரியாதை கொடுக்கத் தேவையில்லை என்று அவர் கோபமாக கூறினாராம்.

இன்று மாலைக்குள் யாரோ ஒருவர் வெளியேற்றப்படுவது உறுதியாகி விடும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil