»   »  வென்றார் ஷில்பா-ஜேட் அவுட்!

வென்றார் ஷில்பா-ஜேட் அவுட்!

Subscribe to Oneindia Tamil

நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறி வார்த்தைகளால் திட்டிய பிக் பிரதர் போட்டியாளரான, இங்கிலாந்து டிவிநடிகை ஜேட் கூடி, போட்டியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 என்ற டிவி நிறுவனம் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. பல்வேறுபிரபலங்களையும் ஒரே வீட்டில் தங்க வைத்து அவர்களின் அன்றாட செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவதுஇந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். இந்நிகழ்ச்சியில் ஷில்பாவும் பங்கேற்றுள்ளார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்தே ஜேட் கூடியும் அவரது தாயார் ஜேக்கி கூடியும் ஷில்பாவை அவமரியாதையாகநடத்தி வந்தனர்.

ஷில்பா ஷெட்டியை பெயர் சொல்லிக் கூப்பிடத் தெரியாத ஜேட் உள்ளிட்ட ஆங்கிலேய பெண் போட்டியாளர்கள்அவருக்கு அப்பளம், சிக்கன் என்று பெயர் வைத்து கூப்பிட்டு அசிங்கப்படுத்தினர்.

உச்சகட்டமாக நாய் என்றும், ஆங்கிலம் பேசத் தெரியாத பெண் என்றும் ஷில்பாவை விமர்சித்தனர்.

இனவெறி வார்த்தைகளாலும் திட்டி அழ வைத்தனர்.

ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் விமர்சித்த சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியது. இந்தியாவிலும்,இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் ஜேட் கூடியின் செயலுக்குக் கண்டனம் தெ>விக்கப்பட்டது.

மேலும், ஷில்பாவுக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்கும்அமைப்பான ஆஃப்காமுக்கு ஆயிரக்கணக்கான இ-மெயில்களும் வந்தன.

இதையடுத்து ஷில்பா, ஜேட் ஆகியோரில் ஒருவரை போட்டியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக தொலைபேசி மூலம் நேயர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஷில்பா நீடிக்கவேண்டும் என பெரும்பான்மையான நேயர்கள் கருத்து தெ>வித்தனர். ஜேட் கூடிக்கு மிகச் சிலரின் ஆதரவேகிடைதது.

இதைத் தொடர்ந்து ஜேட் கூடி போட்டியிலிருந்து நீக்கப்பட்டார். போட்டியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர் பிக்பிரதர் வீட்டிலிருந்து கண்ணீரும், கம்பலையுமாக வெளியேறினார் ஜேட் கூடி.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜேட் கூடி பேசுகையில், என்னைப் பற்றிய செய்திகள் எனக்கு பெரும் கவலையைத்தருகின்றன. நான் செய்தது சரியா, தவறா என்பதை தனிமையில் இருந்து சிந்திக்கப் போகிறேன். ஆனால் நான்இனவெறி பிடித்த பெண் இல்லை. தேவையில்லாமலும் நான் சண்டை போடவில்லை.

எனது செயலால் யாருடைய மனதேனும் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனதுவாழ்க்கையில் இப்படி ஒரு கசப்பான சம்பவத்தை நான் சந்தித்ததில்லை என்று கூறியபடி கிளம்பிச் சென்றார்ஜேட்.

ஜேட் கடந்த 2002ம் ஆண்டு நடந்த பிக் பிரதர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர். அதன் பிறகுதான் அவர்இங்கிலாந்தில் பிரபலமானார். டிவி நடிகையானார். பிக் பிரதர் நிகழ்ச்சியின் மூலம் புகழுக்கு வந்த ஜேட்இப்போது அதே நிகழ்ச்சியின் மூலம் அவமானத்தையும் சந்தித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் தனது தொலைக்காட்சி வாழ்க்கையும் பறிபோய் விடும் நிலையில் உள்ளதாக ஜேட் அச்சம்தெரிவித்துள்ளார். எனது தொலைக்காட்சி வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. எனது வாழ்க்கைஇப்போதுதான் ஆரம்பித்தது. அதற்குள் முடியப் போகிறது என்று புலம்பினார் ஜேட்.

ஜேட் கூடி வெளியேற்றப்பட்ட பின்னர் அவரை மிகவும் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தது சேனல் 4.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil