»   »  ஷில்பாவை திட்டிய நடிகை வீட்டில் கல்வீச்சு!

ஷில்பாவை திட்டிய நடிகை வீட்டில் கல்வீச்சு!

Subscribe to Oneindia Tamil

ஷில்பா ஷெட்டியை இனவெறியுடன் திட்டியதாக சர்ச்சையில் சிக்கி பிக் பிரதர் நிகழ்ச்சியிலிருந்துவெளியேற்றப்பட்ட இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடியின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் பயந்து போன அவர் வீட்டை விட்டு ஹோட்டலில் பாய்த் தங்கியுள்ளார். தனது குந்தைகளுக்குப்பாதுகாப்பு தேவை என்றும் கோரியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 என்ற டிவி நிறுவனம் ஒளிபரப்பி வரும் பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டிஉள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கண்டு கொண்டனர். இதில் ஷில்பாவை இனவெறியுடன் திட்டியதாக சர்ச்சையில்சிக்கினார் ஜேட் கூடியும் அவரது தாயார் ஜேக்கி கூடியும்.

இதையடுத்து முதலில் ஜேக்கியும் பின்னர் நேயர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி ஜேட் கூடியும்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நிகழ்ச்சியிலிருந்து ஜேட் கூடி நீக்கப்பட்டு விட்டாலும் அவர் மீதான ஆத்திரம் தணியவில்லை. லண்டனில் உள்ளஅவரது வீட்டில் சிலர் கல் வீசித் தாக்கியுள்ளனர். இதில் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இருப்பினும்இதுகுறித்து ஜேட் கூடி போலீஸில் புகார் கொடுக்கவில்லை.

இதுகுறித்து ஜேட் கூறுகையில், எனக்கும், எனது 2 குழந்தைகளுக்கும் இப்போது பாதுகாப்பு இல்லை. அவர்கள்இருவரும் உறவினர்களுடன் தான் தங்கியுள்ளனர். நான் ஹோட்டலில் தங்கியுள்ளேன்.

இந்தியாவுக்கு வரும்படி என்னை சில முக்கியப் பிரமுகர்கள் அழைத்தள்ளனர். நானும் அதை ஏற்று இந்தியாசெல்லத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

லண்டனில் கல், இந்தியாவில் என்னென்ன விழப் போகிறதோ?

Please Wait while comments are loading...