»   »  ஷில்பா-பிரதர் தந்த 45 கோடி!

ஷில்பா-பிரதர் தந்த 45 கோடி!

Subscribe to Oneindia Tamil

பிரிட்டனின் சானல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 45 கோடி அளவுக்குப் வருவாய்கிடைக்கவுள்ளதாம்.

63 சதவீத ரசிகர்களின் ஆதரவுடன் நேற்று ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் ஒரேநிகழ்ச்சியில், ஷில்பா ஷெட்டி சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டார்.

சர்வதேச அளவில் பிரபலமான ஷில்பாவுக்கு உள்ளூரில் பெரிய பெயர் கிடையாது என்பதுதான் இதில் காமெடி. அவர் இதுவரை நடித்துள்ள 37படங்களில் முக்கால்வாசிப் படங்கள் தோல்விப் படங்கள்தான்.

ராசியில்லாத நடிகையாகத்தான் ஷில்பா இந்தித் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார். அப்படிப்பட்டவருக்கு பிக் பிரதர் மூலம் பெரிய ரிலீப்கிடைத்துள்ளது.

கிட்டத்தட்ட ரூ. 45 கோடி அளவுக்கு ஷில்பாவுக்கு வருவாய் கிடைக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிட்டத்தட்ட 5 கோடி அளவுக்கு பரிசுகிடைத்துள்ளது. இதுதவிர பல்வேறு விளம்பர நிறுவனங்களில் நடிக்க அட்வான்ஸ் தொகைகளை அள்ளிக் கொடுத்த வண்ணம் உள்ளன.அப்படிப்பட்ட வருவாய் மட்டும் 10 கோடியாம்.

புதிய ஹாலிவுட் பட வாய்ப்பும் ஷில்பாவுக்கு வந்துள்ளது. இதுதவிர பிபிசி தொலைக்காட்சியில் காமெடி தொடர் ஒன்றில் நடிக்கவும் ஷில்பாவைஅணுகியுள்ளனர். இதற்காக பெரும் தொகையை சம்பளமாகக் கொடுக்கவும் அவர்கள் முன் வந்துள்ளனராம்.

கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என சரமாரியாக நிகழ்ச்சிகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். பிக்பிரதர் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது 5 கோடிதான் என்றாலும் அதை வைத்து சில வருடங்களில் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் அளவுக்குஒப்பந்தங்கள் ஷில்பாவுக்கு கிடைக்கவுள்ளன.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil