»   »  பாஜவில் இணைகிறார் ஷில்பா?

பாஜவில் இணைகிறார் ஷில்பா?

Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் திடீர் புகழைப் பெற்றுள்ள ஷில்பா ஷெட்டியை பாஜகவுக்குள் இழுக்க முயற்சிகள்நடக்கின்றன.

இங்கிலாந்தின் சானல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் உலகத்தையே தன் பக்கம்ஈர்த்துள்ளார் ஷில்பா ஷெட்டி.

உள்ளூர் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் ஆரம்பித்து பிபிசி, சிஎன்என், உலக முன்னணிபத்திரிக்கைகளை கடந்த சில வாரங்களாகவே ஆக்கிரமித்து வருகிறார் ஷில்பா.

ஐஸ்வர்யா ராய்க்கு இருந்து வந்த புகழை இதன் மூலம் ஓவர் டேக் செய்துள்ளார் ஷில்பா. அவருக்கு ஹாலிவுட்பட வாய்ப்புகளோடு, சர்வதேச விளம்பர வாய்ப்புகளும் குவியத் தொடங்கியுள்ளன.

மேலும் ஷில்பாவுக்கு, பாலிவுட்டிலும் புதிய கிரேஸ் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அவர் திரும்பும்போதுபிரமாண்டமான வரவேற்பு அளிக்க பாலிவுட்டில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந் நிலையில் ஷில்பாவின் செல்வாக்கை தங்களுக்கு சாதகமாக மாற்ற பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது.உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலை சந்திக்கவுள்ள பாஜகவுக்கு வெற்றி வெகுதூரத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இதனால் ஏதாவது வேறு வழியை கையாள வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. கடந்த மக்களவைதேர்தலின்போதும் வெற்றி வாய்ப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால் ஏகப்பட்ட நடிகர்களையும் நடிகைகளையும்பாஜக வாரிக் கொண்டது. அவர்ளது பணமும் அள்ளித் தரப்பட்டது.

இந்த நடிகை, நடிகர்களால் பாஜகவுக்கு பெரிய அளவில் லாபம் ஏற்படவில்லை. ஆனாலும், அதேடெக்னிக்கை மீண்டும் கையாள வேண்டிய நிலைக்கு பாஜக மீண்டும் தள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஷில்பாவுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்துள்ளதால் அவரை கட்சிக்குள் இழுக்கவேலைகள் ஆரம்பாகியுள்ளன.

ஷில்பா பாஜகவில் சேர வேண்டும் என பாஜக எம்.பியும், மூத்த நடிகருமான வினோத் கண்ணா நேரடியாககோரிக்கை விடுத்துள்ளார்.

சண்டீகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஷில்பாவை பாஜகவில் இணைக்க நாங்கள் முயன்றுவருகிறோம். அவர் பாஜகவில் இணைய வேண்டும். அவருக்கு முக்கியப் பதவியும் வழங்க தயாராகஇருக்கிறோம்.

இந்திய அரசியலில் பாஜகதான் இப்போது பிக் பிரதர். எனவே அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷில்பாபாஜகவில் இணைந்தால் மிகவும் மகிழ்சச்சி அடைவோம்.

பாஜகவில் நடிகர், நடிகையர் இணைவது சாதாரணமான விஷயம்தான். எனக்குப் பிறகு நிறைய கலைஞர்கள்இணைந்துள்ளனர். அந்த வரிசையில் ஷில்பாவும் இணைவதை எதிர்பார்க்கிறோம் என்றார் கண்ணா.

ஷில்பா ஷெட்டியை கட்சியில் இணைக்க பாஜக மூத்த தலைவர்களே நேரடியாக முயற்சியில்ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

பாஜக வலையில் ஷில்பா சிக்குவாரா?

Read more about: will shilpa join bjp

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil