»   »  ஷில்பாவின் தோழி தொல்லை!

ஷில்பாவின் தோழி தொல்லை!

Subscribe to Oneindia Tamil

நடிகை ஷில்பா ஷெட்டி பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற நாங்களும் காரணம், எனவே அவரது பரிசுத் தொகையில் ஒரு பகுதியை எங்களுக்கும்தர வேண்டும் என அவரது தோழியும் ஏஜென்டும் ஷில்பாவை மிரட்டியுள்ளார்களாம்.

லண்டனின் சேனல் 4 நிறுவனம் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் ரொக்கப் பரிசையும் தட்டிச் சென்றார் ஷில்பா.இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார் ஷில்பா.

ஜேட் கூடியின் இனவெறி பேச்சு, கோபம், அவருக்கு ஆதரவாக மற்ற நடிகைகள் காட்டிய அலட்சியப் போக்கு ஆகியவற்றைத் தாண்டி, இறுதியில்வெற்றி வாகை சூடினார் ஷில்பா. இதன்மூலம் ஷில்பாவுக்கு ரூ. 45 கோடி வரை தேறுமாம்.

இந்நிலையில் ஷில்பாவின் வெற்றியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்று கூறி அவரது தோழி பாபி கானும் ஏஜென்ட் ஜாஸ் பர்டனும் மிரட்டியதாகதகவல் வெளியாகியுள்ளது.

ஷில்பா வெற்றி பெற்றதும் நிருபர்களை சந்தித்தார். அப்போது பாபி கான், ஜாஸ் பார்ட்டன் ஆகியோர் தன்னிடம் சட்ட விரோதமாக பங்குகோருவதாக குறிப்பிட்டார். இதனால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்த விசாரணையில், பாபி கான் ஷில்பாவின் நெருங்கிய தோழி எனவும், ஜாஸ் பார்ட்டன் இங்கிலாந்து டெலிவிஷன் நிகழ்ச்சிஅமைப்பாளர்களில் ஒருவர் எனவும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ஷில்பா ஷெட்டியை பிக்பிரதர் நிகழச்சிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக ஷில்பாவிடம் இருந்து ஜாஸ்பார்ட்டன் ரூ. 5 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

முதலில் பிக் பிரதர் நிகழ்ச்சிக்காக மும்பையில் பிரபல நடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய வந்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் ஷில்பாவின்தோழி பாபி கான் மூலம் ஷில்பா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஷில்பா ஷெட்டி வெற்றி பெற்று கோடிக்கணக்கில் ப>சு பெற்றதால் இருவரும் பங்கு கேட்டு ஷில்பாவுக்குதொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து ஷில்பா கூறுகையில், பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு முதலில் நடிகரை தேடி வந்தனர். அதன் பிறகு சில நடிகர்கள் என்னை சிபாரிசு செய்தனர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜாஸ் பார்ட்டன் என்னிடம் ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவருக்கு ரூ. 5 லட்சம் கொடுத்தேன். மற்றபடி இதில் வேறுயாருக்கும் தொடர்பு இல்லை.

ஆனால் பாபி கானும், ஜாஸ்பார்ட்டனும் தவறான தகவலை வெளியிட்டு என்னை தொந்தரவு செய்கிறார்கள். இதற்காக அவர்கள் மீது மான நஷ்டவழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.

Read more about: shilpa shetty in new trouble

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil