»   »  ஷில்பா சர்ச்சை ஒரு நாடகம்?

ஷில்பா சர்ச்சை ஒரு நாடகம்?

Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் நிகழ்ச்சியின்போது கிளம்பிய இனவெறி சர்ச்சை ஒரு நாடகம் என்று கூறப்படுவதற்கு ஷில்பா ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து நடிகை ஜேட் கூடி உள்ளிட்ட சில பெண்கள் ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் சீண்டி திட்டி ரகளைசெய்தனர்.

இதனால் அவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். ஷில்பா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த இன வெறி சர்ச்சையே ஒரு பெ>ய நாடகம்என புதிய புகார் கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக பிக் பிரதர் நிகழ்ச்சியை வடிவமைத்தவரான பாரூக் டோண்டி என்பவர், இந்த நிகழ்ச்சியை பிரபலமாக்கவே இதுபோன்றசர்ச்சைகளை நாங்கள் உருவாக்கினோம். திட்டமிட்ட நாடகம் இது, அதில் ஷில்பா சிறப்பாகவே நடித்தார் கூறியுள்ளார். இதை ஷில்பா கடுமையாகஆட்சேபித்துள்ளார்.

இதுகுறித்து ஷில்பா கூறுகையில், ஜேட் கூடியின் செயலை நான் மறந்து விட்டேன். கூடியை மன்னித்து விட்டேன். நான் யாரையும் எளிதில்மன்னித்து விடும் குணம் கொண்டவள் என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெ>யும்.

ஆனால் டோண்டி இதை நாடகம் என்று கூறியுள்ளார். அதற்கு நானும் உடந்தை என்றும் கூறி வேதனைப்படுத்தியுள்ளார். அவருக்கு எவ்வளவுதைரியம் இருந்தால் இப்படிக் கூறுவார்?

நடந்ததை நாடகம் என்று எப்படி அவர் கூறலாம்? இங்கிலாந்தில் உள்ள இந்தியர்களின் மனதை டோண்டியின் கருத்த புண்படுத்தி,கோபப்படுத்தியுள்ளது.

என்னை இப்போது எல்லோரும் பேசாமல் இங்கிலாந்து தேர்தலில் குதித்து எம்.பி. ஆகலாமே என்று கேட்கின்றனர். ஆனால் எனக்கு அரசியலில்நாட்டம் இல்லை என்றார் ஷில்பா.

Read more about: is shilapa issue a drama
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil