ஷில்பா மீது பிக் புகார்!
தொழிலதிபரை ஆள் வைத்து மிரட்டியதாக ஷில்பா ஷெட்டி விசாரிக்க சூரத் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் அகர்வால். 2003ம் ஆண்டு இவருக்கு பசலூர் ரஹ்மான் என்பவரிடமிருந்து போன் வந்தது. போனில்பேசிய பசலூர் ரஹ்மான், கொலை செய்து விடுவதாக அகர்வாலை மிரட்டினார். இதையடுத்து அகர்வால் கொடுத்த புகா>ன் பேரில் ரஹ்மான் கைதுசெய்யப்பட்டார்.அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஷில்பா ஷெட்டி சொன்னதால் தான் அவ்வாறு மிரட்டியதாக தெரிவித்தார் ரஹ்மான். பண விவகாரத்தில்ரஹ்மானை ஷில்பா தூண்டிவிட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து ஷில்பா ஷெட்டி, அவரது தாயார் சுனந்தா ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் சுனந்தா மட்டும் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார்.
இந் நிலையில் ஷில்பாவிடமும் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஷில்பா கைது செய்யப்படுவாரோ என்று பரபரப்புஏற்பட்டுள்ளது.
தற்போது சிறையில் உள்ள ரஹ்மானை போலீஸ் காவலில் எடுக்கத் திட்டமிட்டுள்ள சூரத் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி விட்டுஷில்பாவையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications