»   »  பாடம் ஆன ஷில்பா!

பாடம் ஆன ஷில்பா!

Subscribe to Oneindia Tamil

ஷில்பா ஷெட்டி, ஜேட் கூடியின் மோதல் இப்போது பாடமாகியுள்ளது. அதாவது இங்கிலாந்தில் பள்ளிப் பாடத்தில் இந்த மோதலை சேர்த்துள்ளனராம்.

லண்டனின் சேனல் 4 நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார் ஷில்பா. நிகழ்ச்சியில் உடன் கலந்து கொண்டஇங்கிலாந்து நாடக நடிகை ஜேட் கூடிக்கும், ஷில்பாவுக்கும் இடையே மோதல் மூண்டது.

ஆனால் இந்த விவகாரத்தில் ஷில்பாவுக்கே ஆதரவு அதிகம் இருந்ததால், ஜேட் கூடி பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.இனவெறியுடன் பேசிய கூடிக்கு பெயர் கெட்டு, அவர் நடித்து வந்த நாடகத்திலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஜேட் கூடி, ஷில்பா விவகாரம் இப்போது இங்கிலாந்து பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம். அதாவது இனவெறிதொடர்பான பாடத்தில் இந்த விவகாரத்தை இணைத்துள்ளனராம்.

இனவெறி குறித்து மாணவர்களுக்கு போதிக்க இதை நல்ல உதாரணமாகக் காட்டி பாடம் நடத்தப்போகிறார்களாம்.

வெள்ளைக்காரனுக்கே பாடம் நடத்தி விட்டார் ஷில்பா, பலே பலே!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil