»   »  சிவாஜி விற்பனை-ஏவிஎம் வருத்தம்

சிவாஜி விற்பனை-ஏவிஎம் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சிவாஜி பட விற்பனை தொடர்பாக வெளியாகும் செய்திகளில் சிறிதளவும் உண்மை இல்லை என்றுதயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தவறான செய்தியை வெளியிட்ட இருஇணைய தளங்கள் மீது சட்ப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவாஜி படம் குறித்து தினசரி ஒரு தகவல் கிளம்பி வருகிறது. சமீபத்தில் கூட சிவாஜி படத்தின் விற்பனை குறித்தசெய்தி வெளியானது. அதில், தெலுங்குப் பட உரிமை பல கோடிக்கு விற்பனை ஆனதாகவும், கேரள உரிமை 3கோடிக்கு விற்பனை ஆனதாகவும் செய்திகள் தெரிவித்தன.

ஆனால் இவற்றை சரவணன் மறுத்துள்ளார். இதுதொடர்பாக சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவாஜி பட விற்பனை தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள அத்தனை செய்திகளுமே தவறானவை. இதுஎங்களுக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இரு இணைய தளங்களில் (தட்ஸ்தமிழ் அல்ல!) சிவாஜி பட விற்பனை குறித்து மிகத் தவறான புள்ளிவிவரம் காட்டப்பட்டுள்ளது.

கேரள மாநில உரிமையை ரூ. 2.6 கோடிக்குத்தான் நாங்கள் கொடுத்துள்ளோம். ஆனால் 3.1 கோடி ரூபாய்க்குவிற்று விட்டதாக ஒரு இணைய தளம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை அவர்களிடம் விளக்கியும்மறுபடியும் தவறான செய்தியையே போடுகின்றனர்.

இதேபோல இன்னொரு இணையதளத்தில், ஆந்திர உரிமை 16 கோடி விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஆந்திர மாநில உரிமை ரூ. 8 கோடிக்குத்தான் விற்றுள்ளது.

கர்நாடக மாநில உரிமை குறித்து பேச்சுக்கள் நடக்கின்றன. இன்னும் யாருக்கு கொடுப்பது என்பது குறித்துஇறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

வெளிநாட்டு உரிமையை இந்த முறை ஒரே நபருக்கு கொடுக்கப் போவதில்லை. தனித் தனியாகத்தான்கொடுக்க இருக்கிறோம்.

வழக்கமாக நாங்கள் கொடுக்கும் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா,கனடா, சிங்கப்பூர், இலங்கை, அரபு நாடுகளில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமை, ஆடியோ, டிவிடி,வீடியோ ஆகியவற்றின் உரிமையை மட்டும் கொடுக்கவுள்ளோம். இதுதொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.

இதேபோல மலேசியா, மொரீஷியஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளில்விற்பனை தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. எதுவும் இறுதியாகவில்லை.

ஆனால் தவறான செய்திகள் வருவதைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த செய்திகளைப்படித்து விட்டு கேள்வி கேட்கும் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டிய நிலைஏற்படுகிறது.

எனவே சிவாஜி படம் குறித்த எந்த செய்தியையும் எங்களிடம் கேட்டு உறுதி செய்த பின்னரே வெளியிடவேண்டும் என பத்திரிக்கைத் துறையினருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

சிவாஜி எதிர்பார்த்தை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டுக்கு இந்தப் படத்தை வெளியிடமுயற்சி எடுத்து வருகிறார்கள் ஷங்கரும் அவரது குழுவினரும் என்று கூறியுள்ளார் சரவணன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil