இன்று இரவே சிவாஜி...ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ

By Staff

சிவாஜி படத்தின் முதல் காட்சி நாளை அதிகாலை 3 மணிக்கு திரையிடப்படுகிறதாம். ரசிகர்களுக்காக இன்று இரவு 9 மணிக்கு ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி நாளை உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில், பெரும் எதிர்பார்ப்பு சிவாஜிக்கு ஏற்பட்டுள்ளது (அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ளது).

ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் ெகாண்டுள்ள சிவாஜி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி படு விறுவிறுப்பாக போய்க் ெகாண்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ. 1.70 கோடியை வசூல் செய்து முன்பதவில் சாதனை படைத்துள்ளது சிவாஜி.

எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத வகையில் அதிக அளவிலான தியேட்டர்களில் திரையிடப்படும் படம் என்ற பெருமையும் சிவாஜிக்குக் கிடைத்துள்ளது.

சென்னை நகர் மற்றும் புறநகர்களில் மட்டும் 24 தியேட்டர்களில் சிவாஜி ரிலீஸ் ஆகிறது. நாளை காலை முதலே படம் திரையிடப்படவுள்ளது. முதல் நாளின் முதல் காட்சி அதிகாலை 3 மணிக்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நாளை அதிகாலை 3 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறதாம். இதுகுறித்து தியேட்டர் மேலாளர் முனி கண்ணையா கூறுகையில், ரசிகர்களின் விருப்பத்திற்கு மதிப்பு ெகாடுத்தே அதிகாலையில் முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ேளாம்.

ஆனால் சில தியேட்டர்களில் இன்று இரவு 9.45 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய கூட படத்தைத் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர் என்றார்.

சிவாஜி படத்தையொட்டி அப்படத்தைத் திரையிடும் தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன. பல தியேட்டர் உரிமையாளர்கள், தங்களது ஊழியர்ளுக்கு புத்தாடைகள் கொடுத்து அசத்தியுள்ளனராம்.

ரசிகர்கள், தியேட்டர்காரர்கள் தவிர திரையுலகினரும் கூட சிவாஜியைப் பார்க்க படு ஆர்வமாக உள்ளனராம். எல்லோருக்கும் முன்பு சிவாஜியைப் பார்த்து படம் குறித்து மதிப்பிட அவர்கள் ஆர்வமாக உள்ளனராம்.

அதிகாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காட்சிகளுக்கு பெரும்பாலும் திரையுலகினரே வருவார்கள் என்று கூறப்படுகிறது. அததற்கு அடுத்த காட்சி 7.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

இந்த நிலையில், சிவாஜியைப் பார்க்க ரசிகர்கள் அவசரப்படுவதால், ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இன்று இரவு 9 மணிக்கு சென்னை நகர் மற்றும் புறநகர்களில் உள்ள தியேட்டர்களில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி இது.

சிவாஜியில் ரஜினி போட்டுள்ள மொட்டை கெட்டப் ரசிகர்களைக் கவர்ந்து விடவே, பல ரசிகர்களும் முடியைத் தானம் செய்து மொட்டை பார்ட்டிகளாக மாறியுள்ளனர். அதே கெட்டப்பில் படம் பார்க்கவும் ஆயத்தமாக உள்ளனராம்.

அமெரிக்காவில்....

சிவாஜி மூலம் தமிழ் சினிமாவுக்கு புதுப் பெருமை கிடைத்துள்ளது. அமெரிக்காவின் பிரபல தியேட்டர் வளாகத்தில் ஒன்று ஐமேக்ஸ் தியேட்டர். இந்த தியேட்டர் வளாகத்தில் இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியானதில்லையாம். முதல் முறையாக தற்போது சிவாஜி இங்கு திரையிடப்படுகிறது.

இண்டியானாபோலிஸில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் சிவாஜி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கலிபோர்னியா, புளோரிடா, டெக்ஸாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலிருந்து இண்டியானாபோலீஸுக்கு ரசிகர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ரசிகர்களின் ஆர்வத்தால் ஐமேக்ஸ் தியேட்டரில் அனைத்து டிக்கெட்டுகளும் சட்டுப்புட்டென்று விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

கிராபிட்டி பிக்சர்ஸ் நிறுவனம்தான் சிவாஜியை இங்கு வெளியிட்டுள்ளது. இதுதவிர செயின்ட் லூயிஸ், புளூமிங்டன், மில்வாக்கி, மாடிசன் ஆகிய இடங்ளிலும் இதே நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

கேரளாவில் புதிய சாதனை

இதற்கிடையே, கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 72 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படவுள்ளதாம்.

இதுவரை ஒரு தமிழ்ப் படம் இந்த அளவுக்கு அதிக தியேட்டர்களில் வெளியிடப்பட்டதில்லையாம். இதுகுறித்து சிவாஜியின் கேரள திரையிடும் உரிமையைப் பெற்றுள்ள ஜானி சாகரிகா (இவர் கேரளாவின் முன்னணி கேசட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்) கூறுகையில், கேரளாவில் சிவாஜி புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு மோகன்லால் நடித்த சோட்டா மும்பை படம்தான் கேரளாவில் அதிக தியேட்டர்களில் (60) திரையிடப்பட்டது. இதுதான் மலையாளத் திரையுலகின் வரலாறு. ஆனால் இதை சிவாஜி இப்போது முறியடித்து விட்டது.

மலபார் பகுதியில் மட்டும் 31 தியேட்டர்களில் சிவாஜி திரையிடப்படுகிறது. இதுவும் கூட ஒரு புதிய சாதனைதான் என்றார்.

பாலக்காட்டில் முதல் காட்சியை அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். இது ரசிகர்களுக்கான காட்சி அல்ல, பொதுமக்களுக்கான காட்சியாம்.

டிக்கெட் விற்பனையும் கூட அங்கு பெரும் சாதனை படைத்து வருகிறதாம். வழக்கமாக மலையாளப் படங்களுக்கு 75 ரூபாய் வரை கட்டணம் இருக்குமாம். ஆனால் முதல் சில வாரங்களுக்கு டிக்கெட் கட்டணத்தை 50 சதவீதம் அதிகரித்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளதால் சிவாஜிக்கான டிக்கெட் கட்டணமும் குண்டக்க மண்டக்க எகிறியுள்ளதாம்.

இப்படத்தை ஜானி ரூ. 3.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளாரம். இதை முதல் சில வாரங்களிலேயே மொத்தமாக அள்ளிக் குவித்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜானி.

இவர் பெயரிலேயே ரஜினி படம் இருக்கேய்யா!

பட்டயைக் கிளப்புங்கப்பா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X