சிவாஜி தியேட்டர்களில் ஐ.டி. ரெய்டு!
ஆந்திராவில் சிவாஜி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி உலகெங்கும் ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது. ஆந்திராவில் சிவாஜி படத்தின் தெலுங்குப் பதிப்பு வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. ஆந்திரா முழுவதும் சிவாஜி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டுள்ளது.கவுண்டர்களில் டிக்கெட் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கப்படும் நிலை அங்கு காணப்படுகிறது. இந்த நிலையில், வருமான வரித்துறையினர் சிவாஜி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அதிரடி ரெய்டு நடத்தியுள்ள்ளனர்.
ஏவூர் என்ற இடத்தில் சிவாஜி படம் திரையிடப்பட்டுள்ள இரண்டு தியேட்டர்களில் அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர். டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்து முக்கியமாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு காட்சியிலும் என்ன வசூல் ஆகியுள்ளது என்பதையும் அதிகாரிகள் கேட்டறிந்தனராம். இதேபோல பீமாவரத்தில் உள்ள தியேட்டரிலும் சோதனை நடந்துள்ளது.
சிவாஜி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்பபடுத்தியுள்ளது.
சிவாஜி படத்தை தனது நண்பரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஸ்பெஷலாக போட்டுக் காட்டினார் ரஜினி. அப்போது 3வது அணிக்கு ஆதரவு தருமாறு பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்தார் நாயுடு.
இந்தப் பின்னணியில் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆந்திராவில் ரஜினியின் சிவாஜி திரையிட்ட தியேட்டர்களில் வருமான வரித்துறை நடத்தியுள்ள ரெய்டு பரபரப்பைக் கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











