கன்னடத்துக்குப் போகும் சிவாஜி புரடக்ஷன்ஸ்

By Staff
Click here for more images

ரஜினி காந்த் நடிப்பில் சந்திரமுகி என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தயாரித்த சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் அடுத்ததாக கன்னடத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் கடைசி மகன் புனீத் ராஜ்குமாரை வைத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கப் போகிறது.

சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்த படம் சந்திரமுகி. இப்படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியில் ஒரு படத்தை சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரித்தது.

தற்போது கலைஞர் டிவிக்காக தவம் என்ற தொடரை தயாரித்து ஒளிபரப்பி வருகிறது சிவாஜி புரடக்ஷன்ஸ். இந்த நிலையில் அடுத்ததாக கன்னடத்தில் ஒரு படம் தயாரிக்க சிவாஜி புரடக்ஷன்ஸ் தீர்மானித்துள்ளது.

இப்படத்தில் ராஜ்குமாரின் இளைய மகன் புனீத் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கான ஜோடியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். படத்தை இயக்கப் போவது பி.வாசு.

இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளதாம்.

ராஜ்குமார், சிவாஜி தயாரிப்பில் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டாராம். ஆனால் அது கடைசி வரை நிறைவேறவில்லை. ஆனால் அவரது மகனுக்குத்தான் அது கை கூடியுள்ளது.

Read more about: shivaji
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X