twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோ, நிஜமாவே சூப்பர் எனது நடிப்பை விட சந்திரமுகியாக ஜோதிகா மிக நன்றாகவே நடித்துள்ளார் என சந்திரமுகியின் மூலமான மணிச்சித்திரத்தாழ் பட நாயகி ஷோபனா பாராட்டியுள்ளார். மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரத்தாழ் படத்தைத் தான் கேட்காமல் கொள்ளாமல், கன்னடத்தில் ஆப்தமித்ரா என்று எடுத்தார் பி.வாசு. கன்னடத்தில் செளந்தர்யா நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றாலும், கன்னட சினிமாவுக்கே உள்ள மிகச் சிறிய ரீச் காரணமாக பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்த ரஜினி, வாசுவைத் தொடர்பு கொண்டு அதை தன்னை வைத்து எடுக்குமாறு கூற, வெகுண்டு எழுந்தார் மணிசித்ரத்தாழ் கதையின் மலையாள எழுத்தாளர். இதையடுத்து அவரை கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் ரஜினியும் வாசுவும். ஒரு வழியாக படத்தின் கதையை வாங்கி, சிம்ரனை புக் செய்து அவர் கர்ப்பமாக இருக்கவே அவரைத் தூக்கிவிட்டு ஜோதிகாவை ஹீரோயினாக்கினர். முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்டான சந்திரமுகி ஜோதிகாவின் நடிப்புக்காகவே ஓடியது. மணிச்சித்திரத்தாழ் படத்தில் ரஜினி வேடத்தில் மோகன்லாலும், பிரபு வேடத்தில் சுரேஷ் கோபியும், ஜோதிகா வேடத்தில் ஷோபனாவும் நடித்திருந்தனர். மலையாள ஒரிஜினலில் தமிழ்ப் பெண்ணின் ஆவி, ஷோபனாவின் உடலுக்குள் புகுந்து ஆட்டிப் படைப்பதாக கதையை அமைத்திருந்தனர். தமிழில் சந்திரமுகி என்ற தெலுங்குப் பெண்ணின் ஆவி, ஜோதிகாவின் உடலுக்குள் புகுவதாக மாற்றினர். சந்திரமுகியில் ரா ரா என்று தெலுங்குப் பாடல் இடம் பெற்றது போல, மணிச்சித்திரத்தாழில் தமிழ்ப் பாடல் இடம்பெற்றது. இந்த மூன்று மொழிப் படங்களிலும் மணிச்சித்திரத்தாழ் சற்று விசேஷமானது. அதில் ஆவி புகுந்த பெண்ணாக நடித்த ஷோபனாவுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது. இத்தனை காலத்திற்குப் பிறகு தான் நடித்த கேரக்டர் மீண்டும் சந்திரமுகி மூலம் பெரிய அளவில் பேசப்பட்டது ஷோபனாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். இதுகுறித்து அவர் கூறுகையில், மணிச்சித்திரத்தாழ் படத்தில் நான் நடித்தபோது அது பெரிய அளவில் பேசப்படும் என நான் நினைக்கவில்லை. மேலும், அதுமாதிரியான கதைகள் மலையாளத்தில் படமாக்கப்படுவது புதிய விஷயம் அல்ல. ஆனாலும் அப்படம் நன்றாக ஓடியது, எனக்கு விருதையும் பெற்றுக் கொடுத்தது. அது சந்திரமுகியாக உருமாறி, ஜோதிகாவின் சிறப்பான நடிப்பால் வென்றுள்ளது. உண்மையிலேயே என்னை விட நன்றாக நடித்துள்ளார் ஜோதிகா. ரியலி சூப்பர்ப்!

    By Staff
    |

    எனது நடிப்பை விட சந்திரமுகியாக ஜோதிகா மிக நன்றாகவே நடித்துள்ளார் என சந்திரமுகியின் மூலமான மணிச்சித்திரத்தாழ் பட நாயகி ஷோபனா பாராட்டியுள்ளார்.

    மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரத்தாழ் படத்தைத் தான் கேட்காமல் கொள்ளாமல், கன்னடத்தில் ஆப்தமித்ரா என்று எடுத்தார் பி.வாசு.

    கன்னடத்தில் செளந்தர்யா நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றாலும், கன்னட சினிமாவுக்கே உள்ள மிகச் சிறிய ரீச் காரணமாக பெரிதாகப் பேசப்படவில்லை.

    ஆனால், அந்தப் படத்தைப் பார்த்த ரஜினி, வாசுவைத் தொடர்பு கொண்டு அதை தன்னை வைத்து எடுக்குமாறு கூற, வெகுண்டு எழுந்தார் மணிசித்ரத்தாழ் கதையின் மலையாள எழுத்தாளர்.

    இதையடுத்து அவரை கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் ரஜினியும் வாசுவும். ஒரு வழியாக படத்தின் கதையை வாங்கி, சிம்ரனை புக் செய்து அவர் கர்ப்பமாக இருக்கவே அவரைத் தூக்கிவிட்டு ஜோதிகாவை ஹீரோயினாக்கினர்.


    முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்டான சந்திரமுகி ஜோதிகாவின் நடிப்புக்காகவே ஓடியது.

    மணிச்சித்திரத்தாழ் படத்தில் ரஜினி வேடத்தில் மோகன்லாலும், பிரபு வேடத்தில் சுரேஷ் கோபியும், ஜோதிகா வேடத்தில் ஷோபனாவும் நடித்திருந்தனர்.

    மலையாள ஒரிஜினலில் தமிழ்ப் பெண்ணின் ஆவி, ஷோபனாவின் உடலுக்குள் புகுந்து ஆட்டிப் படைப்பதாக கதையை அமைத்திருந்தனர்.

    தமிழில் சந்திரமுகி என்ற தெலுங்குப் பெண்ணின் ஆவி, ஜோதிகாவின் உடலுக்குள் புகுவதாக மாற்றினர்.

    சந்திரமுகியில் ரா ரா என்று தெலுங்குப் பாடல் இடம் பெற்றது போல, மணிச்சித்திரத்தாழில் தமிழ்ப் பாடல் இடம்பெற்றது.

    இந்த மூன்று மொழிப் படங்களிலும் மணிச்சித்திரத்தாழ் சற்று விசேஷமானது. அதில் ஆவி புகுந்த பெண்ணாக நடித்த ஷோபனாவுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகை விருது கிடைத்தது.

    இத்தனை காலத்திற்குப் பிறகு தான் நடித்த கேரக்டர் மீண்டும் சந்திரமுகி மூலம் பெரிய அளவில் பேசப்பட்டது ஷோபனாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.


    இதுகுறித்து அவர் கூறுகையில்,

    மணிச்சித்திரத்தாழ் படத்தில் நான் நடித்தபோது அது பெரிய அளவில் பேசப்படும் என நான் நினைக்கவில்லை. மேலும், அதுமாதிரியான கதைகள் மலையாளத்தில் படமாக்கப்படுவது புதிய விஷயம் அல்ல. ஆனாலும் அப்படம் நன்றாக ஓடியது, எனக்கு விருதையும் பெற்றுக் கொடுத்தது.

    அது சந்திரமுகியாக உருமாறி, ஜோதிகாவின் சிறப்பான நடிப்பால் வென்றுள்ளது. உண்மையிலேயே என்னை விட நன்றாக நடித்துள்ளார் ஜோதிகா. ரியலி சூப்பர்ப்!.

    தமிழில் நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு படம் 300 நாட்களைத் தாண்டியுள்ளது என நினைக்கிறேன். அது ரஜினியின் சந்திரமுகி என்பது கூடுதல் சந்தோஷம். ரஜினியுடன் நான் நடித்த சிவா பட நினைவுகள் இப்போது வந்து போகின்றன என்ற ஷேபனாவிடம்,

    ஏன் முன்பு மாதிரி நிறையப் படங்களில் நடிப்பதில்லை ஷோபனா, வயசாகிப் போச்சோ..? என்று கேட்டால்,

    அப்படியெல்லாம் இல்லை. இப்போதெல்லாம் செலக்ட்டிவாக உள்ளேன். நடிப்புக்கும், வயதுக்கும் சம்பந்தமே இல்லை.


    சினிமா என்பதே ஒரு கனவு போலத்தான். நடிக்கும் வரையில்தான் நாம் ராஜாக்கள், ராணிகள். நடிப்பை விட்டு விட்டால் அத்தோடு முடிந்தது கதை. அதன் பிறகு நிஜ வாழ்க்கையை நாம் சந்தித்தாக வேண்டும்.

    அதன் ஏற்றத் தாழ்வுகளை சாதாரண மனிதர்களாக இருந்து சமாளிக்க வேண்டும். சினிமாவை விட்டு விட்டோம் என்றால், ஆட்டோமேட்டிக்காக நமது தலையின் பின்புறம் இருந்த ஒளி வளையமும் ஓடிப் போய் விடும். நாமும் மற்றவர்களைப் போலத்தான்.

    இதை நிறையப் பேர் புரிந்து கொள்ளாமல் குழப்பிக் கொள்வதால்தான் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். எனக்கு அப்படி பிரச்சினை வந்ததில்லை.

    இப்போதெல்லாம் நடிப்பதை விட நடனத்திலும், இசையிலும்தான் எனது நாட்டம் அதிகமாக உள்ளது. நடித்தது போதும் என்ற எண்ணம் வந்து விட்டது என நினைக்கிறேன். நாட்டியம் எனது மூச்சு, இசை எனது உடலில் ஓடும் ரத்தம்.

    இரண்டும் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று தத்துவார்த்தமாக பேசி நிறுத்தினார் ஷோபனா.

    ஒரு நல்ல நடிகையால் நடிக்காமல் இருக்க முடியாது என்பதையும் ஷோபனா புரிந்து கொள்ளட்டுமே!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X