»   »  வர்றேண்டா மதுரைக்கு!

வர்றேண்டா மதுரைக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரையைக் கதைக் களமாக கொண்டு தெலுங்கில் வெளியாகி படா வெற்றி பெற்ற அர்ஜூன் இப்போது டப்ஆகி தமிழுக்கு வருகிறது. இப்படத்திற்கு வர்றேண்டா மதுரைக்கு என்று பெயர் வைத்துள்ளனர்.

மகேஷ்பாபு, ஷ்ரேயா, கீர்த்தி ரெட்டி, பிரகாஷ் ராஜ், சரிதா, நாசர், கலாபவன் மணி என பெருந்தலைகள் நடித்தபடம்தான் அர்ஜூன். இப்படத்திற்காக தோட்டா தரணி போட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செட் ஆந்திரதிரையுலகையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அச்சு அசல் மீனாட்சி அம்மன் கோவில் போலவே இப்படத்திற்காக செட் போட்டு படப்பிடிப்பை அங்குநடத்தினார்கள். தோட்டாதரணியின் கைவண்ணத்தில் மீனாட்சி அம்மன் கோவிலை அப்படியே பெயர்த்துக்கொண்டு வந்து வைத்தது போல படு தத்ரூபமாக இருந்தது அந்த செட்.

இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம். ஷ்ரேயாவின் கண் கவர் கவர்ச்சிதான். மகேஷ்பாபுவின் ஜோடியாக வரும்ஷ்ரேயா பின்னி பெடலெடுத்துள்ளாராம். அவரது ஆட்டத்திற்கு ஆந்திர ரசிகர்கள் தியேட்டரே கலங்கும்வகையில் ஆட்டம் போட்டு குஷியாகினராம்.

மகேஷ்பாபுவின் அதிரடி ஆக்ஷன், மீனாட்சி அம்மன் கோவில் செட், ஷ்ரேயா கிளாமருக்காகவே இப்படம் படுஓட்டம் ஓடியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த குணசேகர் என்பவர்தான் இப்படத்தை இயக்கியவர்.

இப்போது இந்தப் படம் தமிழுக்கும் வருகிறது. வர்றேண்டா மதுரைக்கு என்ற பெயருடன் தமிழ் பேசவுள்ளஇப்படம் ஷ்ரேயாவுக்கு தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள திடீர் டிமாண்ட்டை குறி வைத்து கோதாவில் குதிக்கிறது.

கதைப்படி, கீர்த்தி ரெட்டியும், மகேஷ்பாபுவும் அண்ணன் தங்கச்சி. கீர்த்திரெட்டி மதுரைக்கு வாக்கப்பட்டுபோகிறார். பிரகாஷ் ராஜ்தான் மாமனார். அவரது கொடுமை தாங்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் கீர்த்தி.அதிலிருந்து அவரை எப்படி மீட்கிறார் மகேஷ்பாபு என்பதுதான் கதையாம்.

படம் முழுக்க அதிரடி ஆக்ஷன்தானாம். ஆரம்பம் முதல் முடிவு வரை படு பரபரப்பாக இருக்கும் வகையில்திரைக்கதையை அமைத்திருந்தார் குணசேகர்.

மீனாட்சி அம்மன் கோவில் செட், ஷ்ரேயாவின் கவர்ச்சிக்காகவே இப்படம் தமிழிலும் பட்டயைக் கிளப்பும் எனஎதிர்பார்க்கிறது தயாரிப்பு தரப்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil