»   »  ஷ்ரியா-விக்ரம் ஜோடி!

ஷ்ரியா-விக்ரம் ஜோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷ்ரியா காட்டில் பெரு மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ரஜினி, விஜய்யைத் தொடர்ந்து அடுத்து விக்ரமுடன் ஜோடி போடப்போகிறார் ஜில்ஜில் ஷ்ரியா.

ரஜினியுடன் சிவாஜியில் திறமை காட்டி வரும் ஷ்ரியா, இப்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகனில் ஜோடி போட்டுள்ளார். கூடவே நமீதாஇருப்பதால், தனக்குரிய காட்சிகளில், கவுச்சி ஜாஸ்தியாக இருந்தால் நல்லது என்று தனிப்பட்ட முறையில் வேண்டிக் கொண்டுள்ளாராம்இயக்குநர் பரதனிடம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இப்போது விக்ரமுடன் ஜோடி போடும் வாய்ப்பு ஷ்ரியாவைத் தேடி ஓடி வந்துள்ளது. விக்ரம் நடிக்க, கலைப்புலிதாணுவின் தயாரிப்பில், சுசி. கணேசன் இயக்கத்தில் உருவாகப் போகும் கந்தசாமி படத்தில் ஷ்>யாதான் நாயகியாம்.

முழுக்க காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், மெசேஜ் என படு கலக்கலாக கதையை உருவாக்கியுள்ளாராம் சுசி. கதையை விக்ரமிடம் கூறியபோதுபடு ஜாலியாகி விட்டாராம் சீயான்.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக வருகிறாராம் சீயான் (அப்ப ஷ்ரியா பள்ளிக் கூட பாப்பாவா?). இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக தெரியவேண்டும் என்பதற்காக, பீமாவுக்காக ஏற்றிய உடலை அப்படி இப்படி என்று இறக்கிக் கொண்டிருக்கிறாராம்.

ஷ்ரியாவுக்கு கடும் போட்டியாளராக கருதப்படுபவர் திரிஷா. சாமிக்கும், மாமிக்கும் இடையே நல்ல நட்பு, நெருக்கம் உள்ளது. இப்போது கூடபீமாவில் திரிஷாதான் ஜோடி. இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரியும் படு பொருத்தமாக இருக்கும்.

இப்போது திரிஷா இடத்தைப் பிடிக்க வந்து விட்டார் ஷ்ரியா. சீயானும், ஒரு சேஞ்சுக்காக ஷ்ரியாவுக்கு ஓ.கே. சொல்லிவிட்டாராம். படத்தில்ஷ்ரியாவுக்கும் நடிக்க நிறைய வாய்ப்புகளை வைத்துள்ளாராம் சுசி.

சீயானுடன் சேர்ந்து பின்னிப் பெடலெடுத்து அடுத்த படத்திலும் ஜோடி போட்டு விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறார் ஷ்ரியா.

ஒரு பக்கம் திரிஷா, மறுபக்கம் ஷ்ரியா. கந்தசாமி காட்டிலும் கன மழைதானுங்கோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil