»   »  மழைக்காக ஒரு அடிதடி! மழை நாயகி ஷ்ரேயாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க தலயும், இளைய தளபதியும் முட்டி மோதிக்கொண்டுள்ளார்களாம்.விஜய் நடித்து வரும் போக்கிரியில், அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் அசின். அதேபோல ஆழ்வார் படத்தில்அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளதும் அசின்தான்.இரு படப்பிடிப்புகளும் ஒரே சமயத்தில் நடந்ததால், இரு படங்களிலும் மாறி மாறி கலந்து கொண்டு சமாளித்துவருகிறார் அசின். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் இரு படங்களின் ஷூட்டிங்கும் முட்டிக் கொண்டன. இதனால்குழம்பிப் போன அசின், யார் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வது என மண்டையைப் பிய்த்துக் கொண்டார்.பின்னர் அஜீத் படத்திற்கு டாட்டா காட்டி விட்டு விஜய் படத்திற்குப் போய் விட்டார். இதனால் கடுப்பாகி விட்டார்அஜீத். பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டதாம். இது பழைய கதை.இப்போது மறுபடியும் அஜீத், விஜய்க்கிடையே ஒரு முட்டல் மோதல் நடந்து வருகிறது. நேரடியான மோதல் இதுஇல்லை என்றாலும் கூட இருவரும் ஒரே இலக்கை நோக்கி குறி வைத்திருப்பதால் போட்டி கோலிவுட்டை சூட்டில்ஆழ்த்தியுள்ளது.விஜய்யின் அடுத்த படத்திற்கு ஜோடி தேட ஆரம்பித்துள்ளனர். அந்த இடத்தைப் பிடித்து விட திரிஷாகடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஆனால் தளபதியின் நாட்டம் வேறு மாதிரியாக இருக்கிறது.மழை பட நாயகியும், சிவாஜியில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியுமான ஷ்ரேயாவை தனது ஜோடியாக்க ஆர்வம்தெரிவித்துள்ளார் விஜய்.எப்படியாவது ஷ்ரேயாவைப் பிடித்துப் போட்டு விடுங்கள் என கட்டளையிட்டுள்ளாராம். இங்கேதான்பஞ்சாயத்து ஆரம்பிக்கிறது. அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் தனக்கு ஜோடியாக ஷ்ரேயாவைப் போடுங்கள்என தல கூறியுள்ளார்.இரு ஹீரோக்களும் அணுகியுள்ளதால் ஷ்ரேயா குழம்பிப் போயுள்ளார். யாருக்கு ஓ.கே. சொல்வது என்றகுழப்பம் ஒரு பக்கம், சிவாஜி படம் முடியாமல் எந்தப் படத்திலுமே நடிக்க முடியாதே என்ற வருத்தம் மறுபக்கம்.ஏற்கனவே இதே பிரச்சினையால்தான் கமலுடன் தசாவதாரம் படத்தில் நடிக்க முடியாமல் போனார் ஷ்ரேயா.தலக்கும், தளபதிக்கும் இடையே நடக்கும் ஹீரோயின் வேட்டையில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதைஅறிய கோலிவுட் குசும்பர்கள் காத்துக் கிடக்கிறார்கள். எதையாவது ஊதி விட்டு, கொஞ்ச நாளாக நட்போடுஇருக்கும் இருவருக்கும் இடையே புகையைக் கிளப்பி விடலாமே என்பதுதான் அவர்களது ஆர்வத்திற்குக்காரணம்.ஆக்ஷன் பட கிளைமாக்ஸ் போல இந்த முட்டல் மோதல் படு சூடாகப் போய்க் கொண்டிருக்கிறது. பற்றிக்கொள்ளுமா, புஸ்வானம் ஆகுமா, வெயிட் அண்ட் சீ!

மழைக்காக ஒரு அடிதடி! மழை நாயகி ஷ்ரேயாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க தலயும், இளைய தளபதியும் முட்டி மோதிக்கொண்டுள்ளார்களாம்.விஜய் நடித்து வரும் போக்கிரியில், அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் அசின். அதேபோல ஆழ்வார் படத்தில்அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளதும் அசின்தான்.இரு படப்பிடிப்புகளும் ஒரே சமயத்தில் நடந்ததால், இரு படங்களிலும் மாறி மாறி கலந்து கொண்டு சமாளித்துவருகிறார் அசின். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் இரு படங்களின் ஷூட்டிங்கும் முட்டிக் கொண்டன. இதனால்குழம்பிப் போன அசின், யார் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வது என மண்டையைப் பிய்த்துக் கொண்டார்.பின்னர் அஜீத் படத்திற்கு டாட்டா காட்டி விட்டு விஜய் படத்திற்குப் போய் விட்டார். இதனால் கடுப்பாகி விட்டார்அஜீத். பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டதாம். இது பழைய கதை.இப்போது மறுபடியும் அஜீத், விஜய்க்கிடையே ஒரு முட்டல் மோதல் நடந்து வருகிறது. நேரடியான மோதல் இதுஇல்லை என்றாலும் கூட இருவரும் ஒரே இலக்கை நோக்கி குறி வைத்திருப்பதால் போட்டி கோலிவுட்டை சூட்டில்ஆழ்த்தியுள்ளது.விஜய்யின் அடுத்த படத்திற்கு ஜோடி தேட ஆரம்பித்துள்ளனர். அந்த இடத்தைப் பிடித்து விட திரிஷாகடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஆனால் தளபதியின் நாட்டம் வேறு மாதிரியாக இருக்கிறது.மழை பட நாயகியும், சிவாஜியில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியுமான ஷ்ரேயாவை தனது ஜோடியாக்க ஆர்வம்தெரிவித்துள்ளார் விஜய்.எப்படியாவது ஷ்ரேயாவைப் பிடித்துப் போட்டு விடுங்கள் என கட்டளையிட்டுள்ளாராம். இங்கேதான்பஞ்சாயத்து ஆரம்பிக்கிறது. அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் தனக்கு ஜோடியாக ஷ்ரேயாவைப் போடுங்கள்என தல கூறியுள்ளார்.இரு ஹீரோக்களும் அணுகியுள்ளதால் ஷ்ரேயா குழம்பிப் போயுள்ளார். யாருக்கு ஓ.கே. சொல்வது என்றகுழப்பம் ஒரு பக்கம், சிவாஜி படம் முடியாமல் எந்தப் படத்திலுமே நடிக்க முடியாதே என்ற வருத்தம் மறுபக்கம்.ஏற்கனவே இதே பிரச்சினையால்தான் கமலுடன் தசாவதாரம் படத்தில் நடிக்க முடியாமல் போனார் ஷ்ரேயா.தலக்கும், தளபதிக்கும் இடையே நடக்கும் ஹீரோயின் வேட்டையில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதைஅறிய கோலிவுட் குசும்பர்கள் காத்துக் கிடக்கிறார்கள். எதையாவது ஊதி விட்டு, கொஞ்ச நாளாக நட்போடுஇருக்கும் இருவருக்கும் இடையே புகையைக் கிளப்பி விடலாமே என்பதுதான் அவர்களது ஆர்வத்திற்குக்காரணம்.ஆக்ஷன் பட கிளைமாக்ஸ் போல இந்த முட்டல் மோதல் படு சூடாகப் போய்க் கொண்டிருக்கிறது. பற்றிக்கொள்ளுமா, புஸ்வானம் ஆகுமா, வெயிட் அண்ட் சீ!

Subscribe to Oneindia Tamil

மழை நாயகி ஷ்ரேயாவை தங்களது படத்தில் நடிக்க வைக்க தலயும், இளைய தளபதியும் முட்டி மோதிக்கொண்டுள்ளார்களாம்.

விஜய் நடித்து வரும் போக்கிரியில், அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் அசின். அதேபோல ஆழ்வார் படத்தில்அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளதும் அசின்தான்.

இரு படப்பிடிப்புகளும் ஒரே சமயத்தில் நடந்ததால், இரு படங்களிலும் மாறி மாறி கலந்து கொண்டு சமாளித்துவருகிறார் அசின். ஒரு கட்டத்தில் ஒரே நாளில் இரு படங்களின் ஷூட்டிங்கும் முட்டிக் கொண்டன. இதனால்குழம்பிப் போன அசின், யார் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வது என மண்டையைப் பிய்த்துக் கொண்டார்.

பின்னர் அஜீத் படத்திற்கு டாட்டா காட்டி விட்டு விஜய் படத்திற்குப் போய் விட்டார். இதனால் கடுப்பாகி விட்டார்அஜீத். பின்னர் சமரசம் செய்து வைக்கப்பட்டதாம். இது பழைய கதை.

இப்போது மறுபடியும் அஜீத், விஜய்க்கிடையே ஒரு முட்டல் மோதல் நடந்து வருகிறது. நேரடியான மோதல் இதுஇல்லை என்றாலும் கூட இருவரும் ஒரே இலக்கை நோக்கி குறி வைத்திருப்பதால் போட்டி கோலிவுட்டை சூட்டில்ஆழ்த்தியுள்ளது.

விஜய்யின் அடுத்த படத்திற்கு ஜோடி தேட ஆரம்பித்துள்ளனர். அந்த இடத்தைப் பிடித்து விட திரிஷாகடுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஆனால் தளபதியின் நாட்டம் வேறு மாதிரியாக இருக்கிறது.மழை பட நாயகியும், சிவாஜியில் சூப்பர் ஸ்டாரின் ஜோடியுமான ஷ்ரேயாவை தனது ஜோடியாக்க ஆர்வம்தெரிவித்துள்ளார் விஜய்.

எப்படியாவது ஷ்ரேயாவைப் பிடித்துப் போட்டு விடுங்கள் என கட்டளையிட்டுள்ளாராம். இங்கேதான்பஞ்சாயத்து ஆரம்பிக்கிறது. அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் தனக்கு ஜோடியாக ஷ்ரேயாவைப் போடுங்கள்என தல கூறியுள்ளார்.

இரு ஹீரோக்களும் அணுகியுள்ளதால் ஷ்ரேயா குழம்பிப் போயுள்ளார். யாருக்கு ஓ.கே. சொல்வது என்றகுழப்பம் ஒரு பக்கம், சிவாஜி படம் முடியாமல் எந்தப் படத்திலுமே நடிக்க முடியாதே என்ற வருத்தம் மறுபக்கம்.ஏற்கனவே இதே பிரச்சினையால்தான் கமலுடன் தசாவதாரம் படத்தில் நடிக்க முடியாமல் போனார் ஷ்ரேயா.

தலக்கும், தளபதிக்கும் இடையே நடக்கும் ஹீரோயின் வேட்டையில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதைஅறிய கோலிவுட் குசும்பர்கள் காத்துக் கிடக்கிறார்கள். எதையாவது ஊதி விட்டு, கொஞ்ச நாளாக நட்போடுஇருக்கும் இருவருக்கும் இடையே புகையைக் கிளப்பி விடலாமே என்பதுதான் அவர்களது ஆர்வத்திற்குக்காரணம்.

ஆக்ஷன் பட கிளைமாக்ஸ் போல இந்த முட்டல் மோதல் படு சூடாகப் போய்க் கொண்டிருக்கிறது. பற்றிக்கொள்ளுமா, புஸ்வானம் ஆகுமா, வெயிட் அண்ட் சீ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil