»   »  தங்கர் படத்தில் ஸ்னேகா-ஷ்ரேயா ரெட்டி

தங்கர் படத்தில் ஸ்னேகா-ஷ்ரேயா ரெட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தங்கர்பச்சானின் அடுத்த படமான பள்ளிக்கூடத்தில் ஸ்னேகா நடிக்கிறார். ஈஸ்வரிஷ்ரேயா ரெட்டியும் மிக முக்கியமான கேரக்டரில் வருகிறார்.

விஸ்வாஸ் சுந்தர் தயாரிப்பில் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகப் போகும் படம்பள்ளிக்கூடம். மலையாள ரீமேக்கான இந்தப் படத்தில் நான்கு நாயகர்கள்.

அவர்களில் ஒருவர் இயக்குனர் சீமான். இவர் தவிர சித்திரம் பேசுதடி நாயகன் நரேனும்ஒரு நாயகராக வருகிறார். இதில் பள்ளி ஆசிரியையாக ஸ்னேகா நிடிக்கவுள்ளார்.முதலில் விமலா ராமனைத்தான் தங்கர் புக் பண்ண நினைத்திருந்தார்.

ஆனால் தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தருக்கு, ஸ்னேகாவைப் போடலாமே என்றவிருப்பம் இருந்ததால் ஸ்னேகாவே புக் ஆகி விட்டார். இப்படத்தில் ஷ்ரேயாரெட்டியும் இருக்கிறாராம். திமிரு படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து அசந்துபோனதால்தான் ஷ்ரேயாவை தனது பள்ளிக் கூடத்தில் நடிக்க வைக்க முடிவுசெய்தாராம் தங்கர்.

இவர்களைத் தவிர கானா உலகநிாதனும் படத்தில் இருக்கிறார். இவரை படுவித்தியாசமாக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளாராம் தங்கர். சித்திரம் பேசுதடி படத்தில்இடம்பெற்ற கானாவின் பாட்டுக்கு தங்கர் ரசிகராம். அதைப் பார்த்துத்தான் கானாவுக்குஇந்தப் பட வாய்ப்பு வந்ததாம்.

வழக்கமாக தங்கர் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா இப்படத்தில் இல்லை.மாறாக பரத்வாஜ் இசையமைக்கிறார். தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதிபடத்தை ரிலீஸ் செய்ய தங்கர் திட்டமிட்டுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil