விஷால் அண்ணி ஆகிறார் ஷ்ரேயா

By Staff


நடிகர் விஷாலின் அண்ணனும், தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணாவை மணக்கிறார் ஷ்ரேயா ரெட்டி. இது காதல் கல்யாணம்.


எஸ்.எஸ்.மியூசிக்கில் காம்பியராக கலக்கிக் கொண்டிருந்த ஷ்ரேயாவை கூப்பிட்டு தனது திமிரு படத்தில் வில்லத்தனம் செய்ய வைத்தார் விஷால். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த மதுரைக்கார பிடிவாதக்கார பெண் வேடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஈஸ்வரி கேரக்டரில் படு தெனாவெட்டாக நடித்திருந்த ஷ்ரேயா ஒரே படத்தின் மூலம் பெரும் புகழை அடைந்தார். ஆனால் அடுத்தடுத்து நிறையப் படங்களில் நடிக்காமல் படு செலக்டிவ்வாக நடித்து வருகிறார் ஷ்ரேயா.

வெயில் மற்றும் சமீபத்தில் வெளியான பள்ளிக்கூடம் ஆகிய இரு படங்களிலும் அவரது கேரக்டர் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில்தான் ஷ்ரேயாவுக்கும், விக்ரம் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்து தற்போது கல்யாணத்திற்கு வந்துள்ளது. திமிரு படத்தைத் தயாரித்தவர் விக்ரம் கிருஷ்ணாதான். அப்போதுதான் ஷ்ரேயாவுக்கும் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்ததாம்.

படத்தில் விஷாலுக்கு வில்லியாக நடித்த ஷ்ரேயா, நிஜத்தில் அவருக்கு அண்ணி ஆகப் போகிறார்.

விக்ரம் கிருஷ்ணாவும் 2 படங்களில் முன்பு நடித்தவர்தான். ஆனால் நடிப்பில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தம்பி விஷால் நடிகராக அவதாரம் எடுத்ததும், தான் தயாரிப்பாளராகி விட்டார்.

இப்போது விஷால், நயனதாரா நடிப்பில் சத்யம் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் கிருஷ்ணா, ஷ்ரேயா ரெட்டி காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் கொடுக்கவே இன்று மாலை இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறது. இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

பள்ளிக்கூடம்தான் ஷ்ரேயாவின் கடைசிப் படம் என்கிறார்கள். காரணம், அவர் கல்யாணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டாராம்.

ஆல் தி பெஸ்ட்!

More from Filmibeat

Read more about: shreyareddy vishal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X