»   »  ஷ்ரேயாவுக்கு வந்த நேரம்! தமிழ்ப் படத்தில் நடிக்க வந்து விட்டாலே, கூடவே அதுவும் சேர்ந்து வந்து விடும் போல. மற்ற மொழிப் படங்களில்நடிக்கும்போது வாலைச் சுருட்டிக் கொண்டு நடிக்கும் நடிகைகள், தமிழ்ப் படங்களில் நடிக்க வரும்போது மட்டும் இல்லாத,பொல்லாத அலப்பறைகளை செய்து தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ரொம்பவே நோகடிக்கிறாங்க!

ஷ்ரேயாவுக்கு வந்த நேரம்! தமிழ்ப் படத்தில் நடிக்க வந்து விட்டாலே, கூடவே அதுவும் சேர்ந்து வந்து விடும் போல. மற்ற மொழிப் படங்களில்நடிக்கும்போது வாலைச் சுருட்டிக் கொண்டு நடிக்கும் நடிகைகள், தமிழ்ப் படங்களில் நடிக்க வரும்போது மட்டும் இல்லாத,பொல்லாத அலப்பறைகளை செய்து தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ரொம்பவே நோகடிக்கிறாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் படத்தில் நடிக்க வந்து விட்டாலே, கூடவே அதுவும் சேர்ந்து வந்து விடும் போல. மற்ற மொழிப் படங்களில்நடிக்கும்போது வாலைச் சுருட்டிக் கொண்டு நடிக்கும் நடிகைகள், தமிழ்ப் படங்களில் நடிக்க வரும்போது மட்டும் இல்லாத,பொல்லாத அலப்பறைகளை செய்து தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ரொம்பவே நோகடிக்கிறாங்க!

தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தார் மழை பட நாயகி ஷ்ரேயா. அங்கு அவருக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. திரிஷாவந்து கலக்க ஆரம்பித்த பின்னர் ஷ்ரேயாவைத் தீண்ட அங்கு ஒருத்தரும் இல்லை. இந்த நேரம் பார்த்து,எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தயாரிப்பான மழை படத்தில் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

சரியாக அதைப் பயன்படுத்திக் கொண்ட ஷ்ரேயா, கவர்ச்சியில் புகுந்து விளையாடியுள்ளார். அவரது கவர்ச்சியைப் பற்றிக்கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்கள், உடனே அவரது வீட்டுக்குப் செக் புக்கோடு (எவ்வளவு நாளைக்கித்தான் பெட்டின்னுசொல்றது!) பறந்தோடினார்கள்.


வந்தவர்களை வரவேற்ற தெலுங்குக் குயில் ஷ்ரேயா, அட்டகாசமாக தனது பந்தாக்களை அவிழ்த்து விட ஆரம்பித்தார்.என்னோட சம்பளம் ரூ. 25 லட்சம், தனி கேரவன் கண்டிப்பாக வேண்டும், போக, வர்ற செலவை நீங்களே பார்த்துக்குங்க என்றுஅடுக்கிக் கொண்டே போகிறாராரம்.

நயன்தாரா, அஸின் என முன்னணி நடிகைகள் எல்லாம் பிசியாக இருப்பதால்தான் அவர்கள் கிடைக்காமல் கடைசியாகஷ்ரேயாவைத் தேடி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஏதோ கிளாமரை கொஞ்சம் போட்டுக் கொடுப்பார் என்ற அவர்களதுநப்பாசையில், ஷ்ரேயா போடும் நிபந்தனைகள் மண்ணை அள்ளிப் போடுவது போல இருக்கிறதாம்.

இருந்தாலும், முதல்ல புக் பண்ணுவோம், கொடுக்கிற பணத்துக்குக் கூடுதலாக கிளாமரை கேட்டு வாங்கிக்குவோம் என்றுமனசுக்குள் சமாதானமாகி அட்வான்ஸைக் கொடுத்து விட்டு நடையைக் கட்டும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்களாம்.இதனால் ஷ்ரேயா கையில் ஓரளவு படங்கள் குவிந்துள்ளதாம்.


நயன்தாரா, அஸினிடம் போக முடியாமல்தான் தன்னிடம் வருகிறார்கள் என்பதை ஷ்ரேயாவும் புரிந்து கொண்டுள்ளாராம்.இதனால் வாய்ப்புகளை சிந்தாமல், சிதறாமல் அப்படியே அள்ளிக் கொள்ளவும், அப்படியே சம்பளத்தை ஏற்றி விடவும் முடிவுசெய்தே இப்படிப் பேசி வருகிறாராம். ஆனால் ஷ்ரேயாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறதாம். கிளாமர் விஷயத்தில் கவலையேவேண்டாம் என்று தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்புகிறாராம்.

இதுபோதாதா நம்மாளுகளுக்கு. கேட்கிற பணத்தைக் கொடுத்து விட்டு ஷ்ரேயாவின் கால்ஷீட்டைப் புக் செய்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொள்ளும் நடிகைகள் எல்லாம் போய் பல காலமாச்சு! நான் கிளாமர் காட்டறேன், நீ பணத்தைக்காட்டு என்கிற டிரண்ட்தான் இப்போதெல்லாம்!

வாழ்க தமிழ் சினிமா!!

Read more about: offers pouring in to shreya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil