»   »  ஷ்ரியாவின் சில்லுன்னு ஒரு டான்ஸ்

ஷ்ரியாவின் சில்லுன்னு ஒரு டான்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜியில், சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு கலக்கி வரும் மழை நாயகி ஷ்ரியாவுக்கு தெலுங்கில் ஒரே ஒருகுத்து பாட்டுக்கு ஆடும் வாய்ப்பு வந்துள்ளது. அவரும் அதை ஏற்று அமர்க்களப்படுத்தியுள்ளார்.

மழை படம் ஜெயம் ரவியை விட ஷ்ரியாவுக்கு பெத்த பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது. அடுத்தபடத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜோடியாகி விட்டார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில்நடிப்பதால் கூடுதல் சந்தோஷத்துடன் சிவாஜியில் குதூகலப்படுத்தி வருகிறார்.

இந்தப் படத்திற்கு முன்பு ரஜினியின் மருமகன் தனுஷுடன் சேர்ந்து நடித்த திருவிளையாடல் படமும் முடிந்துரிலீஸுக்கு ரெடியாகியுள்ளது. சிவாஜி வெளியானால் தனது ரேஞ்சே எகிறப் போகிறது என்றுநெருக்கமானவர்களிடம் உற்சாகமாக கூறி வருகிறார் ஷ்ரியா.

இந்த சந்தோஷத்தில் இருந்தவரை முன்னா என்ற தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அணுகினார்.தனது படத்தில் ஒரு குத்துப் பாட்டுக்கு கும்மாளம் போட வேண்டும் என்று அன்புடன் அவர் கேட்க, சம்பளத்தைபெரிய அளவுக்குக் கேட்டார் ஷிரியா.

தயாரிப்பாளர் அந்த சம்பளத்துக்கு தட்டாமல் ஓ.கே. சொல்ல, உடனே ஆடுவதற்கும் ஓ.கே. சொல்லி, தில்லைஜில்லாக்கி அனுப்பினார் ஷ்ரியா. கையோடு பெரிய தொகை ஒன்றை ஷ்ரியாவுக்கு கொடுத்தாராம் தில்.

இந்தக் குத்துப் பாட்டை ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் வைத்து சுடச் சுட சுட்டுவருகிறார்கள். விசேஷம் என்னவென்றால் இப்படத்தில் இலியானாதான் நாயகி. கட்டுக்குலையாத, கும் இடுப்பைவைத்து வெட்டுக் கிளி போல ஆட்டம் போடுவதில் இலியானாதான் இப்போதைக்கு டாப் என்பது தெலுங்கு படரசிகர்களின் ஏகோபித்த ஓட்டு.

அப்படி இருக்கையில், ஷ்ரியாவுக்கு எதுக்கு தனி குத்துப் பாட்டு என்று தெலுங்குப் படவுலகினர் கேள்விஎழுப்புகிறார்கள். இருந்தாலும், ஒரு லட்டுதான் சாப்பிடனுமா, கூட ஒன்று இருந்தால் கெட்டா போச்சு என்றரீதியில்தான் இலியானாவோடு, ஷ்ரியாவின் சிலிர்க்க வைக்கும் குத்துப்பாட்டையும் தில் ராஜு சேர்த்துள்ளார்என்கிறார்கள்.

இந்தக் குத்துப் பாட்டை வடிவமைத்தவர் ராஜு சுந்தரம். ஷ்ரியாவுக்காக சில சிறப்பு மூவ்மென்ட்களைவைத்துள்ளார். இந்த மூவ்மென்ட்கள் கண்டிப்பாக மூடை மாத்தும், போதை ஏத்தும் என்கிறது முன்னா யூனிட்.தெலுங்கில் சிங்கிள் பாட்டுக்கு ஷ்ரியா சிலிர்ப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே தேவதாசு என்ற படத்திலும்ஒரு குத்சாட்டம் போட்டுள்ளார் ஷ்ரியா.

அப்படி போடு... போடு.. போடு..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil