'மானை'த் துரத்தும் 'வேங்கை'!

By Staff


சிம்பு நடிக்கும் வேங்கை படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரியா நடிக்கவுள்ளதாக சிம்பு தரப்பிலிருந்து செய்தி பரவி வருகிறதாம். ஆனால் ஷ்ரியா தரப்பிலிருந்து இதுகுறித்து வாய் திறக்காமல் மெளனம் காக்கின்றனர்.

Click here for more images

கெட்டவன், காளை என பிசியாக உள்ள சிம்பு, அடுத்து நடிக்கவுள்ள படம் வேங்கை. லிங்குச்சாமி இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தின் திரைக்கதை அவர்தான். ஆனால் இயக்கம் மட்டும் அவரது உதவியாளர் பன்னீர்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிவாஜி புகழ் ஷ்ரியா நடிப்பதாக சிம்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிக்க ஒப்புக் கொண்டு விட்டார் ஷ்ரியா, அவருக்கு ரூ. 75 லட்சம் சம்பளம், டிசம்பருக்குப் பிறகு கால்ஷீட் தரப் போகிறார் என்று மேற்படி செய்திகள் கூறுகின்றன.

ஆனால் ஷ்ரியா தரப்பு இதை உறுதிப்படுத்தவில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால், இதுகுறித்து எதையும் பேசாமல் மெளனம் காக்கிறார்கள்.

சிம்பு தற்போது நடித்து வரும் கெட்டவன் படம் பல்வேறு குழப்பங்கள் பிளஸ் பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கதாநாயகிக்கு கல்தா, இயக்குநருடன் தகராறு என பல குழப்பங்கள்.

ஆனால் சிம்புவோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளாமல் வேங்கை படத்துக்காக ஷ்ரியாவுடன் எங்கெல்லாம் போய் டூயட் பாடலாம், எந்த லொகேஷன் சூப்பராக இருக்கும் என யோசித்துக் கொண்டுள்ளாராம்.

வேங்கை படத்தின் பன்ச் லைனாக வெளியே வருது என்று வைத்துள்ளனர். வேங்கை வெளியே வருதோ, இல்லையோ, முதல் ஆளாக வதந்திகள் வர ஆரம்பித்து விட்டது.

More from Filmibeat

Read more about: asin kaalai kettavan shriya simbu vengai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X