வடிவேலுவுடன் ஷ்ரியா!
வடிவேலு நாயகனாக நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் சிவாஜி பட நாயகி ஷ்ரியா சிங்கிள் ஆட்டம் போடுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளாராம். இதற்காக பெருந்தொகை தரப்பட்டுள்ளதாம்.
| Click here for more images |
இம்சை அரசனுக்குப் பிறகு வடிவேலு நாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் படம் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். இதில் அவருக்கு மூன்று ஜோடிகள்.
படப்பிடிப்பு படு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஒரு குத்துப் பாட்டை வைக்கலாம் என்று இயக்குநரும், வடிவேலுவும் தீர்மானித்தபோது யாரைப் போடலாம் என தீவிரமாக யோசித்துள்ளனர்.
முதலில் நயனதாராவைப் போடத் தீர்மானித்து அவரை அணுகியுள்ளனர். ஆனால் அவர் பதிலே சொல்லாமல் மறைமுகமாக இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம்.
இதையடுத்து ஷ்ரியாவை அணுகியுள்ளனர். அவர் பெரும் தொகை தந்தால் ஆட்டம் போடுவதாக கூறவே சற்றும் சளைக்காமல் ஓ.கே. சொல்லி ஷ்ரியாவையே புக் செய்து விட்டனர்.
இப்போது அம்பாசமுத்திரம் பக்கம் வடிவேலுவும், ஷ்ரியாவும் ஆடிப் பாடும் அந்தக் குத்துப் பாட்டை படமாக்கி வருகிறார்களாம்.
இப்படத்திற்காக ஒரு வாரம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ஷ்ரியா. தம்பி ராமையாவின் இயக்கத்தில், செவன்த் சானல் மாணிக்கத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











