»   »  அசத்துவார் ஸ்ருதி - கமல் பெருமிதம்!

அசத்துவார் ஸ்ருதி - கமல் பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil


ஸ்ருதி நடிக்க வந்தால் என்னை விட பல சாதனைகளைப் படைப்பார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.


கமல் குடும்பத்தில் அத்தனை பேருமே கலைஞர்கள்தான். விருதுகளை வாங்குவதற்காகவே பிறந்தவர்கள் போல கமல் தவிர அவரது அண்ணன் சாருஹாசன், அவரது மகள் சுஹாசினி ஆகியோர் தேசிய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளனர். இதில் கமல் மட்டும் 3 முறை தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.

கமல்ஹாசனின் மனைவியான சரிகாவும் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கியுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசன் குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகை வரப் போகிறார். அவர் வேறு யாருமல்ல, கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிதான்.

ஆரம்பத்தில் இசையில்தான் நாட்டமாக இருந்தார் ஸ்ருதி. ஆனால் திடீரென நடிப்பின் மீது அவருக்கு மோகம் பிறந்தது. தந்தையிடம் அதைச் சொல்ல அவரும் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

இதுகுறித்து கமல்ஹாசனே சிலாகித்துக் கூறியுள்ளார். ஹைதராபாத் சென்றிருந்த கமல் அங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்ருதி இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் அவருக்கு இசையில்தான் அதிக நாட்டம்.

அவர் எடுக்கும் முடிவுகள் சரியாகவே இருக்கும். இதனால் நான் எதற்குமே தடை சொன்னது கிடையாது. திடீரென ஒரு நாள் நான் நடிக்க போகிறேன் என்றார். நீங்களே என்னை வைத்து ஒரு படம் எடுங்களேன் என்று கூறியபோது ஆச்சரியப்பட்டேன்.

தான் நினைப்பதை சாதித்துக் காட்டுபவர் ஸ்ருதி. அவர் நடிக்க வந்தால் பல அற்புதங்கள், சாதனைகளைச் செய்வார். அதில் எனக்கு சந்தேகமே இல்லை என்றார் கமல்.

ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று சமமீபத்தில் சிலர் அணுகியுள்ளனர். ஆனால் இயக்க மாட்டேன், வேண்டுமானால் தயாரிக்கிறேன் என்று கூறி விட்டாராம் கமல்.

தமிழ் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் குறித்து பிரமிப்புடன் பேசுகிறார் கமல். இப்போதைய நடிகைகள் எல்லாம் பிரமாதமாக நடிக்கிறார்கள். எனக்குக் கிடைத்தது போன்ற இயக்குநர்கள் அவர்களுக்குக் கிடைத்திருந்தால் இவர்களின் ரேஞ்சே வேறாக இருந்திருக்கும் என்று பாராட்டுகிறார் கமல்.

'கலைஞானி'யே பாராட்டி விட்டார், நடிகைகளே எல்லோருமாக சேர்ந்து கமலுக்கு பாராட்டு விழா எடுத்து விடுங்கள்!!

Read more about: actress, kamal, shruthi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil