மீண்டும் ஏக்துஜே கேலியே - ரதி மகன், கமல் மகள் ஜோடி?

By Staff

Ek Duje Ke Liye remake
இந்தி ரசிகர்களால் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களாலும் மறக்க முடியாத இந்தி பிளாக்பஸ்டர் படமான ஏக் துஜே கேலியே மீண்டும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் என்ன விசேஷம் என்றால் ஒரிஜினல் படத்தில் ஜோடி சேர்ந்த கமல்ஹாசன், ரத்தி அக்னிஹோத்தி ஆகியோரின் வாரிசுகள்தான் இந்த ரீமேக் படத்தில் ஜோடி போடப் போகிறார்கள் என்பதுதான்.

ரத்தி அக்னிஹோத்ரியின் மகன் ஹீரோவாகவும், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

1981ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம்தான் ஏக் துஜே கேலியே. கே.பாலச்சந்தரின் கைவண்ணத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம். தெலுங்கில் இதை மரோசரித்ரா என்ற பெயரில் உருவாக்கினார் கே.பாலச்சந்தர்.

இப்போது இந்தப் படத்தை ரீமேக் செய்கிறார்களாம் இந்தியில். கமல், ரத்தி ஆகியோரின் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். ரத்தியின் மகன் தனுஜும், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதியும் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் அவர்களை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை மறுத்துள்ளார் ஸ்ருதி. இதுகுறித்து எனக்கு எதுவுமே தெரியாது. எப்படி இப்படி ஒரு செய்தி பரவியது என்றே தெரியவில்லை. இப்போது நான் முருகதாஸின் படத்தில் பிசியாக இருக்கிறேன். வேறு படம் எதையும் ஒப்புக் கொள்ள முடியாத நிலையில்தான் நான் இருக்கிறேன். யாராவது அணுகினால் கூட என்னால் இப்போது நடித்துத் தர முடியாது என்பதுதான் உண்மை என்றார்.

இருப்பினும் நிச்சயம் ஏக் துஜே கேலியே ரீமேக்கில் ஸ்ருதியும், தனுஜும் நடிப்பார்கள் என்று பாலிவுட்டில் பலமாக பேசிக் கொள்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X