மறக்க முடியலையே நயனதாரா!

By Staff

தன்னைப் பிடிக்காதவர்கள் ஒன்று சேர்ந்து நயனதாராவை தன்னிடமிருந்து பிரித்து விட்டதாக புலம்பியுள்ளார் சிம்பு.

ஐயா, சந்திரமுகி என அட்டகாசமாக ஆரம்பித்த நயனதாராவின் திரை வாழ்க்கை வல்லவனில் நடிக்க ஆரம்பித்த பின்னர் முடங்கிப் போய் விட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்தபோது அவருக்கும், சிம்புவுக்கும் இடையே ஏற்பட்ட காதல், படம் முடிந்ததும் முறிந்து போய் விட்டது.

இப்போதெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பயப்படுகிறார் நயனதாரா. சிம்பு ஏதாவது வம்பு பண்ணி விடுவாரோ என்ற பயம்தான் காரணம். இவருக்காகவே, யாரடி நீ மோகினி படத்தின் ஷூட்டிங்கை மலேசியாவில் வைக்கவுள்ளனர்.

இந்த நிலையில், தனது முறிந்து போன காதல் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக புலம்பியுள்ளார் சிம்பு. நயனதாராவும் நானும் காதலித்தோம். எங்கள் ஜோடி பொருத்தத்தை பார்த்த எல்லோரும் பொறமைப்பட்டார்கள். ஆனால் இப்போது பிரிந்துவிட்டோம்.

நான் ஊரில் இல்லாத போது சிலர் நயனதாராவிடம் என்னை பற்றி தவறாக கூறி எங்களை பிரித்து விட்டனர். நான் இங்கேயே இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது, பிரிந்திருக்க மாட்டோம்.

நயனதாராவை விட்டு பிரிந்தாலும் கூட என் காதல் நிஜமானது. எங்களால் ஒருவரையொருவர் மறக்க முடியாது, அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தோம்.

எல்லோருடைய மனத்திலும் பழைய நினைவுகள் என்று ஒன்றிருக்கும், அதை மறக்க முடியாது.

சென்னையில் நயன்தாரா படபிடிப்பில் பாதுகாப்பு போடப்பட்டது என நான் பாங்காங்கில் இருக்கும் போது இன்டர்நெட்டில் பார்த்தேன். அதில் என்னை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது. நான் அப்படிபட்டவன் இல்லை என்கிறார் சிம்பு.

முற்றிப் போன பின்னர் கவலைப்பட்டு என்ன பயன்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X