»   »  அத்தை சினேகா-சிம்பு டென்ஷன்!

அத்தை சினேகா-சிம்பு டென்ஷன்!

Subscribe to Oneindia Tamil

என்னுடன் நடிக்க முடியாது என்றால் அத்தோடு விட்டு விட வேண்டும். அதை விட்டு விட்டு வெளியில் போய் பேட்டியெல்லாம் கொடுப்பது தேவையில்லாதது என்று நடிகை சினேகா மீது பாய்ந்துள்ளார் சிம்பு.

நயனதாரா மேட்டருக்குப் பின்னர் சிம்புவுடன் நடிக்கவே பல நடிகைகள் அஞ்சுகிறார்கள். அவரது கெட்டவன், காளை ஆகிய படங்களில் நடிக்க முன்னணி ஹீரோயின்கள் பலரும் மறுத்து விட்டனர். கால்ஷீட் இல்லை, உடம்பு சரியில்லை என்று உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறி ஓடி விட்டனர்.

இதனால் எஸ்.எஸ்.மியூசிக்கில் காம்பியரிங் செய்து வரும் லேகா வாஷிங்டன், வாய்ப்பு இல்லாமல் வீட்டோடு உட்கார்ந்திருக்கும் நிலா என கிடைத்தவர்களை வைத்து இப்படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

இந் நிலையில் சிம்புவுக்கும், சினேகாவுக்கும் லடாய் வெடித்துள்ளது. எல்லாம் சிம்பு கொடுத்த ஒரு கேரக்ரடால் வந்த வினை. காளை படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. அதில் ஒரு கொடுமைக்கார மாமியார் கேரக்டர் உள்ளதாம்.

இந்தக் கேரக்டரில் சினேகாவை நடிக்க வைக்க திட்டமிட்ட சிம்பு, சினேகாவைப் பிடித்து பேசியுள்ளார். அத்தை வேடம் என்று சிம்பு சொன்னவுடன் கடுப்பாகி விட்டாராம் சினேகா. என்னால் இந்த கேரக்டரில் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

அப்படியும் ஆத்திரம் தீரவில்லை சினேகாவுக்கு. தனக்குத் தெரிந்த செய்தியாளர்களைக் கூப்பிட்டு, என்னை மாமியார் வேடத்தில் நடிக்கக் கூப்பிட்டார் சிம்பு, ஆனால் நான் முடியாது என்று கூறி விட்டேன்.

மாமியார் வேடத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. மார்க்கெட் சரிந்து விடவில்லை. சிம்பு தன்னுடன் ஒரு பாட்டுக்கு ஆடக் கூப்பிட்டிருந்தால் கூட சரி என்று சொல்லியிருப்பேன் என்று பொருமியிருந்தார்.

சினேகாவின் இந்தப் பேட்டி சிம்புவை கடுப்பாக்கி விட்டது. சட்டென போனை எடுத்து சினேகாவிடமே பொரிந்து தள்ளி விட்டார். முடியாது என்று விட்டு விட வேண்டியதுதானே, அதென்ன பேட்டி கொடுப்பது என்று சினேகாவிடம் போனிலேயே சண்டை போட்டாராம்.

இப்போது வெளிப்படையாகவும் சினேகாவை வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார். இதுகுறித்து சிம்பு கூறுகையில்,

சினேகாவின் பேட்டியைப் பார்த்து விட்டு அதிர்ச்சியாகி விட்டேன்.எனது மாமியார் கேர்கடரில் நடிக்க சினேகாவை மட்டும் நாங்கள் கூப்பிடவில்லை. அவரைப் போல பல நடிகைகளிடமும் கேட்டோம்.

நாங்ள் கேட்டு மறுத்தவர்கள் எல்லாம் அதை அப்படியே விட்டு விட்டார்கள். ஆனால் தேவையில்லாமல் சினேகா மட்டும் இதைப் பிரச்சினையாக்கியுள்ளார்.

முடியாது என்றால் விட்டு விட வேண்டும். எதற்காக தேவையில்லாமல் பேட்டி கொடுக்க வேண்டும்.

என்னுடன் ஆடத் தயார் என்று கூறியுள்ளார் சினேகா. அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும், திறமை வேண்டும். தகுதி உடையவர்களுடன் மட்டுமே நான் ஆடுவேன் என்று குமுறியுள்ளார் சிம்பு.

அடடா..!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil