»   »  ஷ்ரியாவுக்கு '75' - சிம்பு ஆஃபர்!!

ஷ்ரியாவுக்கு '75' - சிம்பு ஆஃபர்!!

Subscribe to Oneindia Tamil


ஷ்ரியாவுடன் ஜோடி சேர ஆர்வமாக உள்ளாராம் சிம்பு. இதற்காக அவரைத் தொடர்பு கொண்ட சிம்பு, 75 லட்சம் சம்பளம் தருவதாகவும், தனது அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளாராம்.

Click here for more images

ரஜினியுடன் ஜோடி போட்ட நடிகைகளுடன் தானும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்பதில் அலாதிப் பிரியம் கொண்டவர் சிம்பு. சந்திரமுகியில் ஜோடி போட்ட நயனதாராவுடன் வல்லவனில் ஜோடி சேர்ந்தார். படப்பிடிப்போடு காதலையும் வளர்த்தார். கடைசியில் எல்லாம் குளறுபடியாகி ஒன்றும் இல்லாமல் போய் விட்டது.

இந்த நிலையில் தற்போது சிவாஜியில் ரஜினியோடு ஜோடி போட்ட ஷ்ரியாவை குறி வைத்துள்ளாராம் சிம்பு.

இயக்குநர் லிங்குச்சாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ், ஒரு படம் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. லிங்குச்சாமியின் உதவியாளர் பன்னீர்செல்வம் படத்தை இயக்கவுள்ளார்.

இதில் சிம்பு நடிக்கவுள்ளார். இதில் தனக்கு ஜோடியாக ஷ்ரியாவைத்தான் போட வேண்டும் என்ற ஒரே ஒரு கண்டிஷனை சுபாஷ் சந்திரபோஸிடம் வைத்துள்ளாராம்.

சொன்னதோடு நில்லாமல் தானே ஷ்ரியாவை போனில் பிடித்துப் பேசினாராம். 75 லட்சம் சம்பளம் தரச் சொல்கிறேன். என்னுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம் சிம்பு.

சிம்புவின் ஆஃபர் சிலிர்க்க வைத்தாலும் கூட ஷ்ரியா தரப்பில் இன்னும் எந்த உறுதியான பதிலும் தரப்படவில்லையாம்.

சிம்பு தற்போது காளை, கெட்டவன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சிலம்பாட்டம் என்ற படமும் தயாரிப்பில் உள்ளது. இந்த நிலையில் அடுத்த படம் அவரைத் தேடி வந்துள்ளது.

Read more about: shreya, simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil