டெலிபிலிமில் சிம்ரன்
பெரிய திரை வாய்ப்புகள் தட்டுத் தடுமாறிக் கொண்டிருப்பதால் தன்னைத் தேடி வந்த டெலிபிலிம் வாய்ப்பை தட்டாமல் ஏற்றுக் கொண்டுள்ளார் முன்னாள் உடுக்கை இடையழகி சிம்ரன்.
கல்யாணத்திற்கு முன்பு இருந்த சிம்ரனின் ரேஞ்சே தனி. ஆனால் அம்மாவான பிறகு இப்போது அவர் ஹீரோயின் வாய்ப்புக்காக இலவு காத்த கிளி போல காத்திருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.இந்தநிலையில், சிம்ரனைத் தேடி ஒரு டெலிபிலிம் வாய்ப்பு வந்துள்ளதாம். சமுத்திரக்கனி இந்த டெலிபிலிமை இயக்கவுள்ளார். அதில் சிம்ரன்தான் ஹீரோயின்.
சின்னத் திரையில் சாதனை படைத்தவர் சமுத்திரக்கனி. பின்னர் சரண் தயாரித்த உன்னை சரணடைந்தேன், விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு போன்ற படங்களை இயக்கிய சமுத்திர கனி, இப்போது டெலிபிலிமுக்குத் தாவியுள்ளார்.
ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து போராடும் பெண்ணின் கதையை மையமாக வைத்து இந்தத டெலிபிலிமை இயக்குகிறார் கனி.
பெண்களுக்கு எதிரான கொடுமையை எதிர்த்து போராடும் பெண்ணாக நடிக்கிறார் சிம்ரன். இவரது கணவராக சம்பத் ராஜ் நடிக்கிறார். இவர் நெறஞ்ச மனசு படத்தில் நடித்துள்ளார்.
அடுத்த மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்க போகும் இந்த டெலிபிலிமுக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
பெயர் வைக்காவிட்டால் என்ன சிம்ரன் நடிக்கிறாரே அதுதான் மேட்டர்!


Click it and Unblock the Notifications











