twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிருபர்களை திட்டிய சிம்ரன்! சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம்வாங்கியதாக கூறப்படுவது கட்டுக் கதை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை நகரில்தீவிரப் பிரசாரம் செய்தார் சிம்ரன். அவரைப் பார்க்கவும், அவர் பேசிய தமிழைகேட்கவும் பெரும் கூட்டம் கூடியது.பிரசாரத்திற்காக அதிமுகவிடமிருந்து கணிசமான தொகையை சம்பளம் போல சிம்ரன்வாங்கியதாக அப்போதே வதந்திகள் கிளம்பின. மேலும் ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுஎன்றும் வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.அந்த செய்திகளை இப்போது மறுத்துள்ளார் சிம்ரன். சென்னையில் இந்துஸ்தான் லீவர்நிறுவனத்தின் உடல் துர்நாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சிம்ரன்.அதற்காக செய்தியாளர்களை சந்தித்தார். இந்துஸ்தான் லீவர் பிரஸ் மீட் தானே..தன்னிடம் அழகுக் குறிப்புகளைத் தான் நிருபர்கள் கேட்பார்கள் என்று நினைத்தாரோஎன்னவோ மிக ரிலாக்ஸ்டாக பேச ஆரம்பித்தார்.ஆனால், அவரிடம் யாருமே அழகு பத்தி பேசவில்லை. நேரடியாக அரசியல்கேள்விகள் வீசப்பட்டன. முதலில் இதை எதிர்பார்க்காத சிம்ரன் பல்லைக் கடித்தார்.பின்னர் சமாளித்துக் கொண்டு செயற்கையான புன்னகையோடு பதில் சொல்லஆரம்பித்தார்.அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம் வாங்கியதாக கூறப்படுவதில்உண்மையே இல்லை, அபத்தமான வதந்தி இது.ஜெயலலிதா தைரியமான பெண்மணி என்று நான் நினைத்தேன். அதனால்தான்அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். இது எனது தனிப்பட்ட விருப்பம்,இதில் பணம் எங்கிருந்து வந்தது?எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது அவ்வளவு பெரியபாவமா?அதிமுக இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதாக நான்நினைக்கவில்லை.சென்னை மக்கள் அதிமுகவுக்கு சரியான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். நான் தீவிரஅரசியலில் இறங்கும் அளவக்கு வயதானவள் கிடையாது. அவ்வளவு வயதாகிவிடவில்லை எனக்கு. (அப்ப கெழவிகள் தான் அரசியலுக்கு வரணுமா?.. இவர்சொல்லும் காரணத்தைப் பாருங்கள்)உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டபோது, இல்லை என்றார்.நீங்க அதிமுக தானே என்று கேட்டதற்கு, ஆமாம் என்றார். அப்புறம் ஏன் பிரச்சாரம் செய்ய மாட்டீங்க என்றுகேட்டபோது, எரிச்சலான சிம்ரன்,நான் அரசியல்வாதி அல்ல. எனக்கு அதிமுக பிடித்திருந்தது, ஜெயலலிதாவைப்பிடித்திருந்தது. அவருக்காகத் தான் தேர்தல் பிரசாரம் செய்தேன் என்றார்.பிரச்சாரம் செய்ய அதிமுகவிடம் பணம் வாங்கினீர்களா என்று கேட்டபோது, புல்ஷிட்என்று முகத்தில் ஜிவுஜிவு என கோபம் வெடிக்க திட்டிவிட்டு ஓடினார்.நிருபர்களும் விடாமல் தமிழக அரசியல், மற்றும் சிம்ரனுக்குப் பிடித்த அதிமுக குறித்தசில அடிப்படைக் கேள்விகளை கேட்டபோது, பதிலே சொல்லாமல் தப்பித்து ஓட்டமாய்ஓடிப் போனர் நடிகை.சிம்ரனின் கோபத்துக்கு, சர்ச்சைக்கு உள்ளாகிவிட்ட தன்னை இனி இந்துஸ்தான் லீவர்தொடர்ந்து பிராண்ட் அம்பாஸிடராக வைத்திருக்குமா என்ற பயமே காரணம்என்கிறார்கள். கொட்டியல்லவா கொடுக்கிறது லீவர் நிறுவனம்.தெலுங்கு படத்திலிருந்து நீக்கம்?:இந் நிலையில் இது தாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாகதெலுங்கில் ஹீரோயினாக புக் ஆன ஒரு படத்திலிருந்து சிம்ரன் தூக்கப்படுவார் என்றுதெரிகிறது.இது குறித்து ராஜசேகரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஜீவிதா கூறுகையில்,சிம்ரன் ரொம்ப குண்டாக இருக்கிறார். உடம்பைக் குறைக்கச் சொல்லியிருக்கிறோம்.அவர் படத்தில் இருப்பாரா இல்லையா என்பதை அப்புறம் சொல்கிறேன் என்றார்.என்னடா இது.. சிம்ரனுக்கு சோதனைக்கு மேல் சோதனை.

    By Staff
    |

    சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம்வாங்கியதாக கூறப்படுவது கட்டுக் கதை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.

    சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை நகரில்தீவிரப் பிரசாரம் செய்தார் சிம்ரன். அவரைப் பார்க்கவும், அவர் பேசிய தமிழைகேட்கவும் பெரும் கூட்டம் கூடியது.

    பிரசாரத்திற்காக அதிமுகவிடமிருந்து கணிசமான தொகையை சம்பளம் போல சிம்ரன்வாங்கியதாக அப்போதே வதந்திகள் கிளம்பின. மேலும் ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுஎன்றும் வெட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.

    அந்த செய்திகளை இப்போது மறுத்துள்ளார் சிம்ரன். சென்னையில் இந்துஸ்தான் லீவர்நிறுவனத்தின் உடல் துர்நாற்றத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சிம்ரன்.

    அதற்காக செய்தியாளர்களை சந்தித்தார். இந்துஸ்தான் லீவர் பிரஸ் மீட் தானே..தன்னிடம் அழகுக் குறிப்புகளைத் தான் நிருபர்கள் கேட்பார்கள் என்று நினைத்தாரோஎன்னவோ மிக ரிலாக்ஸ்டாக பேச ஆரம்பித்தார்.

    ஆனால், அவரிடம் யாருமே அழகு பத்தி பேசவில்லை. நேரடியாக அரசியல்கேள்விகள் வீசப்பட்டன. முதலில் இதை எதிர்பார்க்காத சிம்ரன் பல்லைக் கடித்தார்.பின்னர் சமாளித்துக் கொண்டு செயற்கையான புன்னகையோடு பதில் சொல்லஆரம்பித்தார்.

    அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம் வாங்கியதாக கூறப்படுவதில்உண்மையே இல்லை, அபத்தமான வதந்தி இது.

    ஜெயலலிதா தைரியமான பெண்மணி என்று நான் நினைத்தேன். அதனால்தான்அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். இது எனது தனிப்பட்ட விருப்பம்,இதில் பணம் எங்கிருந்து வந்தது?

    எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது அவ்வளவு பெரியபாவமா?அதிமுக இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதாக நான்நினைக்கவில்லை.

    சென்னை மக்கள் அதிமுகவுக்கு சரியான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். நான் தீவிரஅரசியலில் இறங்கும் அளவக்கு வயதானவள் கிடையாது. அவ்வளவு வயதாகிவிடவில்லை எனக்கு. (அப்ப கெழவிகள் தான் அரசியலுக்கு வரணுமா?.. இவர்சொல்லும் காரணத்தைப் பாருங்கள்)

    உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டபோது, இல்லை என்றார்.நீங்க அதிமுக தானே என்று கேட்டதற்கு, ஆமாம் என்றார். அப்புறம் ஏன் பிரச்சாரம் செய்ய மாட்டீங்க என்றுகேட்டபோது, எரிச்சலான சிம்ரன்,

    நான் அரசியல்வாதி அல்ல. எனக்கு அதிமுக பிடித்திருந்தது, ஜெயலலிதாவைப்பிடித்திருந்தது. அவருக்காகத் தான் தேர்தல் பிரசாரம் செய்தேன் என்றார்.

    பிரச்சாரம் செய்ய அதிமுகவிடம் பணம் வாங்கினீர்களா என்று கேட்டபோது, புல்ஷிட்என்று முகத்தில் ஜிவுஜிவு என கோபம் வெடிக்க திட்டிவிட்டு ஓடினார்.

    நிருபர்களும் விடாமல் தமிழக அரசியல், மற்றும் சிம்ரனுக்குப் பிடித்த அதிமுக குறித்தசில அடிப்படைக் கேள்விகளை கேட்டபோது, பதிலே சொல்லாமல் தப்பித்து ஓட்டமாய்ஓடிப் போனர் நடிகை.

    சிம்ரனின் கோபத்துக்கு, சர்ச்சைக்கு உள்ளாகிவிட்ட தன்னை இனி இந்துஸ்தான் லீவர்தொடர்ந்து பிராண்ட் அம்பாஸிடராக வைத்திருக்குமா என்ற பயமே காரணம்என்கிறார்கள். கொட்டியல்லவா கொடுக்கிறது லீவர் நிறுவனம்.

    தெலுங்கு படத்திலிருந்து நீக்கம்?:

    இந் நிலையில் இது தாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகருக்கு ஜோடியாகதெலுங்கில் ஹீரோயினாக புக் ஆன ஒரு படத்திலிருந்து சிம்ரன் தூக்கப்படுவார் என்றுதெரிகிறது.

    இது குறித்து ராஜசேகரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஜீவிதா கூறுகையில்,சிம்ரன் ரொம்ப குண்டாக இருக்கிறார். உடம்பைக் குறைக்கச் சொல்லியிருக்கிறோம்.அவர் படத்தில் இருப்பாரா இல்லையா என்பதை அப்புறம் சொல்கிறேன் என்றார்.

    என்னடா இது.. சிம்ரனுக்கு சோதனைக்கு மேல் சோதனை.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X