ஸ்பெஷல்ஸ்
கோவில்பட்டி வீரலட்சுமி படம் மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தில் சிம்ரனின் நடிப்பு கலக்கலாக இருக்கிறதாம்.
பெருத்த சர்ச்சைகளுடன் படமாக்கப்பட்டுள்ள கோவில்பட்டி வீரலட்சுமியில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் சிம்ரன். அதுவும் சொந்தக் குரலில் பேசி.
குருவம்மா படத்தில் தேவயானி சொந்தக் குரலில் பேசியதை (பேசினாரா!) அறிந்த சிம்ஸ், தானும் வீரலட்சுமி படத்தில் சொந்தக் குரலில்தான்பேசுவேன் என்று அடித்துக் கூறி விட்டாராம்.
வேறு என்ன செய்வது, வினையே என்று ஓ.கே. சொல்லி விட்டாராம் தயாரிப்பாளர்.
இப்போது சிம்ரன் தன் கட்டை பஞ்சாபிக் குரலில், தமிழ் மழை பொழியப் போகிறார்.
நடிகர் அர்ஜூனுக்கு சென்னைக்கு அருகே மிகப் பெரிய காய்கறிப் பண்ணை உள்ளது. இங்கு பெரும்பாலும் கன்னடர்கள்தான் தொழிலாளிகளாகப் பணியாற்றிவந்தனர்.
இதை சிலர் சுட்டிக் காட்டியதால் ஆட்களை மாற்றி விட்டு லோக்கல் ஆட்களைப் போட்டு விட்டாராம்.


Click it and Unblock the Notifications











