விஜய்யுடன் ஆட வரும் சிம்ரன் மீண்டும் ஒரு சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வரப் போகிறார் சிம்ரன்.சிம்ரன் கர்ப்பமாக இருப்பதால் சந்திரமுகியில் இருந்து தூக்கிவிட்டோம் என வாசு கூற, அதை மறுத்துவிட்டுச் சென்றது சிம்ரன் தரப்பு.இதையடுத்து சிம்ரன் கர்ப்பமா, இல்லையா.. என்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் வைக்காத குறையாக தீவிர விவாதம்நடத்தி வந்தார்கள் சிம்ரன் ரசிகர்கள்.இந் நிலையில் அவர் கர்ப்பம் என்பது இப்போது தான் உறுதியாகியுள்ளது. அதுவும் எப்போது, அவருக்கு இப்போது 9 மாதமாம். அடுத்தமாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ளதாம்.டெல்லியில் தனது கணவர் தீபக் பாஹாவின் வீட்டில் பூரண ஓய்வில் இருக்கிறார் சிம்ரன். ஆண் குழந்தை வேண்டும் என்பது சிம்ரனின்ஆசையாம்.அது இருக்கட்டும்.. விஷயம் என்ன தெரியுமோ?.. குழந்தை பிறந்த கையோடு மிக விரைவில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடப்போகிறார் சிம்ரன்.திருப்பாச்சியின் பிரமாண்ட வெற்றிக்குப் பின், சச்சினின் லேசான ஊத்தலுக்குப் பின், விஜய் நடிக்கப் போகும் சிவகாசி. இது காதல்,சென்டிமெண்ட் கலந்த வழக்கமான விஜய் படம். ஆதாவது ஆக்ஷன் படம்.அம்மா சென்டிமெண்டை ராஜ்கிரண் லெவலுக்கு பிழிந்து தரப் போகிறார் இயக்குனர் பேரரசு. இதில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது சீதா..சீதா..அப்பாவாக ராஜேஷ் நடிக்கிறார். இதில் விஜய்குக்கு ஜோடி ஆசின். படத்தில் ஆசினுக்கும் ஒரு அப்பா வேண்டுமே.. அந்த கேரக்டரில்மலையாள நடிகர் முரளி நடிக்கிறார். (இவரை படத்தில் புக் செய்துவிட்டு ராம் படத்தின் இயக்குனர் அமீர் பட்ட பாடுகளை தனியே ஒருபடமாகவே எடுக்கலாம். திடீர் திடீரென சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாயமாகும் தன்மை கொண்ட முரளி, சதா சுதியிலேயே இருப்பார்.விஷயம் தெரிந்தும் கூட அவரையே புக் செய்திருக்கிறார்கள்)படத்தில் வில்லனாக வந்து விஜய்யிடம் அடி வாங்கப் போவது பிரகாஷ் ராஜ்.இத்தனை பேர் இருந்தாலும் ஒரு சிம்ரன் டான்சும் இருந்தா தான் சிவகாசிக்கே அழகு என்று இயக்குனர் நினைத்தார். கர்ப்பமாகஇருக்கிறாரே, பிரசவத்துக்குப் பின் ஆட ஒப்புக் கொள்வாரா என்ற டவுட்டுடனேயே இயக்குனர் பேரரசு சிம்ரனுடன் டெலிபோனில் பேச,விஜய்யுடன் டான்ஸா நான் ரெடி, டெலிவரி முடிஞ்சு 2 மாத ரெஸ்டுக்குப் பின் நான் ஆட ரெடி என்று சிம்ரன் திருவாய் மலர்ந்திருக்கிறார்.இது போதாதா, விஜய்யும் சிம்ரனும் ஆடிக் கலக்க போடுங்கப்பா ஒரு கலக்கான செட் என்று உத்தரவிட்டுவிட்டார் இயக்குனர்.இதையடுத்து வாகினி ஸ்டுடியோவில் ரங்கநாதன் தெரு மாதிரியே அச்சு அசலாக ஒரு செட்டை போட்டு வருகிறார்கள். இதற்காகசெலவிடப்படும் தொகை எம்புட்டு தெரியுமோ.. ரூ. 1 கோடி.நடனக் காட்சி தவிர, படத்தின் முக்கியக் காட்சிகளும் இந்த செட்டில் தான் எடுக்கப் போகிறார்களாம். அடுத்த மாதம் படப்பிடிப்பு ஸ்டார்ட்ஆகிறது. அதுவரை விஜய் லண்டனில் குடும்பத்துடன் ஓய்வில் இருப்பாராம்.கர்ப்பமாக இருப்பதைக் காரணம் காட்டி தான் நடித்து வந்த கிச்சா வயசு 16 படத்தின் சூட்டிங்குக்கு பெரும்பாலான நேரம் வரவே இல்லைசிம்ரன். இதனால், அந்தப் படம் வேதாளம் மாதிரி அந்தரத்தில் அலேக் ஆக தொங்கிக் கொண்டிருக்கிறது.டெலிவரி முடிந்து விஜய்யுடன் ஆட வரும்போது, இதையும் சிம்ரன் முடித்துக் கொடுப்பார் என்றார் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் இதன்தயாரிப்பாளர்.நம்பினோர் கெடுவதில்லை!

By Staff

மீண்டும் ஒரு சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆட வரப் போகிறார் சிம்ரன்.

சிம்ரன் கர்ப்பமாக இருப்பதால் சந்திரமுகியில் இருந்து தூக்கிவிட்டோம் என வாசு கூற, அதை மறுத்துவிட்டுச் சென்றது சிம்ரன் தரப்பு.

இதையடுத்து சிம்ரன் கர்ப்பமா, இல்லையா.. என்று சாலமன் பாப்பையாவை வைத்து பட்டிமன்றம் வைக்காத குறையாக தீவிர விவாதம்நடத்தி வந்தார்கள் சிம்ரன் ரசிகர்கள்.

இந் நிலையில் அவர் கர்ப்பம் என்பது இப்போது தான் உறுதியாகியுள்ளது. அதுவும் எப்போது, அவருக்கு இப்போது 9 மாதமாம். அடுத்தமாத இறுதியில் குழந்தை பிறக்க உள்ளதாம்.

டெல்லியில் தனது கணவர் தீபக் பாஹாவின் வீட்டில் பூரண ஓய்வில் இருக்கிறார் சிம்ரன். ஆண் குழந்தை வேண்டும் என்பது சிம்ரனின்ஆசையாம்.

அது இருக்கட்டும்.. விஷயம் என்ன தெரியுமோ?.. குழந்தை பிறந்த கையோடு மிக விரைவில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடப்போகிறார் சிம்ரன்.

திருப்பாச்சியின் பிரமாண்ட வெற்றிக்குப் பின், சச்சினின் லேசான ஊத்தலுக்குப் பின், விஜய் நடிக்கப் போகும் சிவகாசி. இது காதல்,சென்டிமெண்ட் கலந்த வழக்கமான விஜய் படம். ஆதாவது ஆக்ஷன் படம்.

அம்மா சென்டிமெண்டை ராஜ்கிரண் லெவலுக்கு பிழிந்து தரப் போகிறார் இயக்குனர் பேரரசு. இதில் விஜய்க்கு அம்மாவாக நடிப்பது சீதா..சீதா..

அப்பாவாக ராஜேஷ் நடிக்கிறார். இதில் விஜய்குக்கு ஜோடி ஆசின். படத்தில் ஆசினுக்கும் ஒரு அப்பா வேண்டுமே.. அந்த கேரக்டரில்மலையாள நடிகர் முரளி நடிக்கிறார். (இவரை படத்தில் புக் செய்துவிட்டு ராம் படத்தின் இயக்குனர் அமீர் பட்ட பாடுகளை தனியே ஒருபடமாகவே எடுக்கலாம். திடீர் திடீரென சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாயமாகும் தன்மை கொண்ட முரளி, சதா சுதியிலேயே இருப்பார்.விஷயம் தெரிந்தும் கூட அவரையே புக் செய்திருக்கிறார்கள்)

படத்தில் வில்லனாக வந்து விஜய்யிடம் அடி வாங்கப் போவது பிரகாஷ் ராஜ்.

இத்தனை பேர் இருந்தாலும் ஒரு சிம்ரன் டான்சும் இருந்தா தான் சிவகாசிக்கே அழகு என்று இயக்குனர் நினைத்தார். கர்ப்பமாகஇருக்கிறாரே, பிரசவத்துக்குப் பின் ஆட ஒப்புக் கொள்வாரா என்ற டவுட்டுடனேயே இயக்குனர் பேரரசு சிம்ரனுடன் டெலிபோனில் பேச,

விஜய்யுடன் டான்ஸா நான் ரெடி, டெலிவரி முடிஞ்சு 2 மாத ரெஸ்டுக்குப் பின் நான் ஆட ரெடி என்று சிம்ரன் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

இது போதாதா, விஜய்யும் சிம்ரனும் ஆடிக் கலக்க போடுங்கப்பா ஒரு கலக்கான செட் என்று உத்தரவிட்டுவிட்டார் இயக்குனர்.

இதையடுத்து வாகினி ஸ்டுடியோவில் ரங்கநாதன் தெரு மாதிரியே அச்சு அசலாக ஒரு செட்டை போட்டு வருகிறார்கள். இதற்காகசெலவிடப்படும் தொகை எம்புட்டு தெரியுமோ.. ரூ. 1 கோடி.

நடனக் காட்சி தவிர, படத்தின் முக்கியக் காட்சிகளும் இந்த செட்டில் தான் எடுக்கப் போகிறார்களாம். அடுத்த மாதம் படப்பிடிப்பு ஸ்டார்ட்ஆகிறது. அதுவரை விஜய் லண்டனில் குடும்பத்துடன் ஓய்வில் இருப்பாராம்.

கர்ப்பமாக இருப்பதைக் காரணம் காட்டி தான் நடித்து வந்த கிச்சா வயசு 16 படத்தின் சூட்டிங்குக்கு பெரும்பாலான நேரம் வரவே இல்லைசிம்ரன். இதனால், அந்தப் படம் வேதாளம் மாதிரி அந்தரத்தில் அலேக் ஆக தொங்கிக் கொண்டிருக்கிறது.

டெலிவரி முடிந்து விஜய்யுடன் ஆட வரும்போது, இதையும் சிம்ரன் முடித்துக் கொடுப்பார் என்றார் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் இதன்தயாரிப்பாளர்.

நம்பினோர் கெடுவதில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X