»   »  தமன்னா போய் சிந்து துலானி!

தமன்னா போய் சிந்து துலானி!

Subscribe to Oneindia Tamil

அர்ஜூன் நடிக்கும் மருதமலை படத்தில் நடிப்பதாக இருந்த தமன்னா இப்போது நீக்கப்பட்டு விட்டாராம்.அவருக்குப் பதில் சிந்து துலானியை நாயகியாக்க பேச்சு நடக்கிறதாம்.

இன்ஸ்பெக்டராக அர்ஜூனும், ஏட்டு ஏகாம்பரமாக வடிவேலுவும் நடிக்கும் ஆக்ஷன் படம் மருதமலை. ஆக்ஷன்பிளஸ் கிளாமர் கலந்த இந்த படத்தில் நிலா, அர்ஜூனுக்கு நாயகியாக நடிக்கிறார்.

படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு. அதில் முதலில் தமன்னா நடிப்பதாக இருந்தார். ஆனால் என்னகாரணமோ, ஸாரி சொல்லி விட்டு தமன்னா விலகி விட்டாராம்.

இதனால் அவரது இடத்தில் சிந்து துலானியை போட்டு படத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.

தமன்னாவின் கேரக்டர் படு கிளாமராக நடிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்ததாம். இந்த ஓவர் கிளாமர்தமன்னாவுக்கு உடன்பாடு இல்லை என்பதால்தான் அவர் விலகிக் கொண்டாராம். நானே செம கிளாமராகநடிக்கிறேன். அதை விட கூடுதலாக வேண்டும் என்றால் எப்படி என்று முகம் சுளித்தபடி விலகி விட்டாராம்தமன்னா என்கிறார்கள்.

அதனால்தான் கிளாமர் என்றால் கிலோ கிலோவாக அல்வா சாப்பிடுவது போல ஜாலியாக எடுத்துக் கொள்ளும்சிந்து துலானியை அணுகியுள்ளனர். அவரும் மறுபடியும் தனது தமிழ் திரையுலக அதிர்ஷ்டத்தைப் பரிசீலிக்கஎண்ணி இப்படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அர்ஜூனின் முறைப் பெண்ணாக படு முறுக்காக வருகிறாராம் நிலா. அவருக்கும் கிளாமர் காட்சிகளைநிறையவே வைத்திருக்கிறார்களாம். அவரும் அதகளம் பண்ண ரெடியாக இருக்கிறாராம்.

இதுதவிர ஒரு குத்துப் பாட்டுக்கும் கெத்தான ஒரு ஆளை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். பழசாக யாரையாவதுஆட விடலாமா அல்லது புதுச் சரக்காக இறக்கலாமா என்று அர்ஜூனும், இயக்குநர் சுராவும் சீரியஸாக டிஸ்கஸ்பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம்.

திகட்டாத அளவுக்கு இனிப்பு இருந்தா தித்திப்புதான்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil