»   »  மிஸ் வோர்ல்ட்: வெல்வாரா சிந்தூரா? சீனாவில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான மிஸ் வோர்ல்ட் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் சிந்தூராபோட்டியிடுகிறார்.சீனாவின் சானியா நகரில் நடக்கும் இப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்தும் 98 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு நடனம், நீச்சல் உடை, நடை, உடை மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் இறுதிப் போட்டி 10ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஆந்திரப் பெண்ணான சிந்தூரா பங்கேற்கிறார். 21 வயதான சிந்துரா கல்லூரி மாணவி.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர் என்றாலும் நியூசிலாந்து நாட்டில் வளர்ந்தவர். அங்கு பேசன் டிசைனிங்கில் இருந்த சிந்துரா, அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது மும்பையில் குடியேறிவிட்டார்.கல்லூரியில் பார்மசூடிகல் மார்கெட்டிங் தொடர்பான உயர் படிப்பு படித்து வருகிறார்.நியூசிலாந்தில் விளம்பர மாடலாகவும் இருந்துள்ள சிந்தூரா அங்குள்ள எப்.எம். ரேடியோ ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்இருந்துள்ளார்.கடைசியாக கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பிரியங்கரா சோப்ரா வென்றார்.அதன் பிறகு இந்தியப் பெண் யாரும் பட்டம் வெல்லவில்லை.மும்பையில் நடந்த பெமினா "மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன் மூலம் இப்போது மிஸ்வோர்ல்ட் போட்டிக்கு சிந்தூரா தகுதி பெற்றுள்ளார். (இந்தப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் ஷம்ஷாத் பேகம் என்பவர்போட்டியிட்டு தோற்றுவிட்டார்)சிந்துரா பட்டம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் நிச்சயமாகிவிட்டன. இப்போதே அவரைசினிமாவில் புக் செய்ய தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். போட்டியை முடித்துவிட்டு சினிமாவுக்குகட்டாயமாக வருவதாகக் கூறியுள்ளாராம் சிந்தூரா.சிந்தூராவின் உடல் வாகு, உயரம், அழகு, அழகிப் போட்டிகளில் பங்கேற்றதால் கவர்ச்சிக் காட்டுவதில் பிரச்சனை இருக்காது,அத்தோடு தெலுங்கு தெரிந்தவர் என்பதால் கதாநாயகியாக தெலுங்கு படவுலகில் அவர் நிச்சயம் பெரிய ரவுண்டு வரவாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர் தெலுங்கு சினிமா உலகத்தினர்.இதற்கிடையே, சிந்தூரா இந்திய பெண்ணே கிடையாது. அவர் எப்படி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில்பங்கேற்கலாம் என்று எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.ஆனால், இந்தியாவில் பிறந்தவர் என்பதால் இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பதில் தடையில்லை என்கிறார்கள் அழகிப்போட்டிக்கு அவரை தேர்வு செய்து அனுப்பிய ஜூரிகள்..இதுவரை உலக அழகிப் பட்டத்தை மற்ற நாடுகளை விட இந்தியப் பெண்கள் தான் அதிக முறை (5 தடவை) வென்றுள்ளர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ் வோர்ல்ட்: வெல்வாரா சிந்தூரா? சீனாவில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான மிஸ் வோர்ல்ட் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் சிந்தூராபோட்டியிடுகிறார்.சீனாவின் சானியா நகரில் நடக்கும் இப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்தும் 98 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு நடனம், நீச்சல் உடை, நடை, உடை மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் இறுதிப் போட்டி 10ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஆந்திரப் பெண்ணான சிந்தூரா பங்கேற்கிறார். 21 வயதான சிந்துரா கல்லூரி மாணவி.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர் என்றாலும் நியூசிலாந்து நாட்டில் வளர்ந்தவர். அங்கு பேசன் டிசைனிங்கில் இருந்த சிந்துரா, அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது மும்பையில் குடியேறிவிட்டார்.கல்லூரியில் பார்மசூடிகல் மார்கெட்டிங் தொடர்பான உயர் படிப்பு படித்து வருகிறார்.நியூசிலாந்தில் விளம்பர மாடலாகவும் இருந்துள்ள சிந்தூரா அங்குள்ள எப்.எம். ரேடியோ ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்இருந்துள்ளார்.கடைசியாக கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பிரியங்கரா சோப்ரா வென்றார்.அதன் பிறகு இந்தியப் பெண் யாரும் பட்டம் வெல்லவில்லை.மும்பையில் நடந்த பெமினா "மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன் மூலம் இப்போது மிஸ்வோர்ல்ட் போட்டிக்கு சிந்தூரா தகுதி பெற்றுள்ளார். (இந்தப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் ஷம்ஷாத் பேகம் என்பவர்போட்டியிட்டு தோற்றுவிட்டார்)சிந்துரா பட்டம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் நிச்சயமாகிவிட்டன. இப்போதே அவரைசினிமாவில் புக் செய்ய தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். போட்டியை முடித்துவிட்டு சினிமாவுக்குகட்டாயமாக வருவதாகக் கூறியுள்ளாராம் சிந்தூரா.சிந்தூராவின் உடல் வாகு, உயரம், அழகு, அழகிப் போட்டிகளில் பங்கேற்றதால் கவர்ச்சிக் காட்டுவதில் பிரச்சனை இருக்காது,அத்தோடு தெலுங்கு தெரிந்தவர் என்பதால் கதாநாயகியாக தெலுங்கு படவுலகில் அவர் நிச்சயம் பெரிய ரவுண்டு வரவாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர் தெலுங்கு சினிமா உலகத்தினர்.இதற்கிடையே, சிந்தூரா இந்திய பெண்ணே கிடையாது. அவர் எப்படி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில்பங்கேற்கலாம் என்று எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.ஆனால், இந்தியாவில் பிறந்தவர் என்பதால் இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பதில் தடையில்லை என்கிறார்கள் அழகிப்போட்டிக்கு அவரை தேர்வு செய்து அனுப்பிய ஜூரிகள்..இதுவரை உலக அழகிப் பட்டத்தை மற்ற நாடுகளை விட இந்தியப் பெண்கள் தான் அதிக முறை (5 தடவை) வென்றுள்ளர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீனாவில் நடைபெறவுள்ள இந்த ஆண்டுக்கான மிஸ் வோர்ல்ட் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் சிந்தூராபோட்டியிடுகிறார்.

சீனாவின் சானியா நகரில் நடக்கும் இப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்தும் 98 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு நடனம், நீச்சல் உடை, நடை, உடை மற்றும் பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் இறுதிப் போட்டி 10ம் தேதி நடக்கிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஆந்திரப் பெண்ணான சிந்தூரா பங்கேற்கிறார். 21 வயதான சிந்துரா கல்லூரி மாணவி.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பிறந்தவர் என்றாலும் நியூசிலாந்து நாட்டில் வளர்ந்தவர்.

அங்கு பேசன் டிசைனிங்கில் இருந்த சிந்துரா, அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது மும்பையில் குடியேறிவிட்டார்.கல்லூரியில் பார்மசூடிகல் மார்கெட்டிங் தொடர்பான உயர் படிப்பு படித்து வருகிறார்.


நியூசிலாந்தில் விளம்பர மாடலாகவும் இருந்துள்ள சிந்தூரா அங்குள்ள எப்.எம். ரேடியோ ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்இருந்துள்ளார்.

கடைசியாக கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பிரியங்கரா சோப்ரா வென்றார்.அதன் பிறகு இந்தியப் பெண் யாரும் பட்டம் வெல்லவில்லை.

மும்பையில் நடந்த பெமினா "மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன் மூலம் இப்போது மிஸ்வோர்ல்ட் போட்டிக்கு சிந்தூரா தகுதி பெற்றுள்ளார். (இந்தப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் ஷம்ஷாத் பேகம் என்பவர்போட்டியிட்டு தோற்றுவிட்டார்)

சிந்துரா பட்டம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் நிச்சயமாகிவிட்டன. இப்போதே அவரைசினிமாவில் புக் செய்ய தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். போட்டியை முடித்துவிட்டு சினிமாவுக்குகட்டாயமாக வருவதாகக் கூறியுள்ளாராம் சிந்தூரா.


சிந்தூராவின் உடல் வாகு, உயரம், அழகு, அழகிப் போட்டிகளில் பங்கேற்றதால் கவர்ச்சிக் காட்டுவதில் பிரச்சனை இருக்காது,அத்தோடு தெலுங்கு தெரிந்தவர் என்பதால் கதாநாயகியாக தெலுங்கு படவுலகில் அவர் நிச்சயம் பெரிய ரவுண்டு வரவாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர் தெலுங்கு சினிமா உலகத்தினர்.

இதற்கிடையே, சிந்தூரா இந்திய பெண்ணே கிடையாது. அவர் எப்படி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில்பங்கேற்கலாம் என்று எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.

ஆனால், இந்தியாவில் பிறந்தவர் என்பதால் இந்தப் போட்டியில் அவர் பங்கேற்பதில் தடையில்லை என்கிறார்கள் அழகிப்போட்டிக்கு அவரை தேர்வு செய்து அனுப்பிய ஜூரிகள்..

இதுவரை உலக அழகிப் பட்டத்தை மற்ற நாடுகளை விட இந்தியப் பெண்கள் தான் அதிக முறை (5 தடவை) வென்றுள்ளர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil