»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil


தான் நடித்த தத்தித் தாவுது மனசு படம் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. மிகவும் எதிர்பார்த்த பாய்ஸ் படமும்படுத்துக் கொண்ட து.

இதனால் நொந்துபோன சிந்தூரி இப்போது பெரிதும் நம்பியிருப்பது என்னவோபிடிச்சிருக்கு படத்தைத் தான்.

தத்தித் தாவுது மனசு படத்தைத் தயாரித்த மும்தாஜுக்கு சிந்தூரியை ஏதோ காரணத்துக்காகப் பிடித்துப் போக,மூன்று ஹீரோயின்களில் இவரையே
முக்கியமானவாக்கினார்.

அதில் தாரளமாய் நடித்தார் சிந்தூரி. தமிழில்முன்னணிக்கு வந்துவிடுவோம் என்று நினைத்தார். அந்தப் படம் ரிலீசாகாமல் பெட்டியில் படுத்துக் கிடக்கிறது.அடுத்து பாய்ஸ் படத்தில் ஹரிணிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் தரப்பட்டதால் மகிழ்ச்சியில் இருந்தார்சிந்தூரி. ஆனால், படம் பிளாப் ஆனதால் சான்ஸ்கள் ஏதும் தேடி வரவில்லை.

இந் நிலையில் முன்பே அட்வான்ஸ் வாங்கிவிட்ட என்னவோ பிடிச்சிருக்கு படத்தின் சூட்டிங்ஆரம்பித்துவிட்டதால் மகிழ்ச்சியில் இருக்கும் சிந்தூரி, எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்பதில்தீவிரமாக இருக்கிறார்.

படம் முழுக்க கவர்ச்சியில் கலக்கும் கேரக்டராம். அதை செவ்வனே செய்து வருகிறார் சிந்தூரி.

படத்தின் தயாரிப்பாளர் சிறிஸ்கந்தராஜாவுக்கும் ரொம்ப நாளாய் நடிக்கும் ஆசை. அதையும் இந்தப் படத்தின்மூலம் நிறைவேற்றிக் கொண்டுள்ள கந்தராஜா, தனக்கு ஜோடியாக விபச்சாரப் புகழ் நடிகை புவனேஸ்வரியைப்பிடித்துப் போட்டுள்ளார்.

தயாரிப்பாளரின் அன்பைப் பெறுவதிலும் கவர்ச்சி காட்டுவதிலும் சிந்தூரிக்கும் புவனேஸ்வரிக்கும் கடும்போட்டியாம்.

படத்தின் கதாநாயகனாக காதல் கொண்டேன் படத்தில், செகண்ட் ஹீரோவாக நடித்த சுதீப் நடிக்கிறார்.

ஏற்காடு, மூணாறு என இயற்கை கொஞ்சும் இடங்களில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

Please Wait while comments are loading...