சிங்கத்தை ஒரு வாரம் முன்கூட்டியே 'விடும்' சன் பிக்சர்ஸ்!

சூர்யா-அனுஷ்கா நடிப்பில், ஹரி இயக்கியுள்ள சிங்கம் படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்தப் படத்தில் பாடல்கள் வரும் திங்கள்கிழமை வெளியாகின்றன. படத்தை ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சுறா படத்தின் ரிசல்ட், சிங்கத்தை சீக்கிரமே வெளியில் விடவேண்டிய கட்டாயத்துக்கு சன் பிக்ஸர்ஸை தள்ளியுள்ளது என்கிறார்கள். மேலும் ஜூன் முதல் வாரத்துக்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் திறந்து விடுவார்கள். எனவே படங்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள் என்பதால், மே மாதத்திலேயே சிங்கத்தை ரிலீஸ் செய்கிறார்களாம்.
ஜெயம் ரவி - தமன்னா நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில், ஜெயம் கம்பெனி தயாரிப்பில் உருவாகிவரும் தில்லாலங்கிடி படத்தையும் சன் பிக்ஸர்ஸ்தான் வாங்கியுள்ளது. ஜூன் இறுதியில் இந்தப் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











