ஸ்பெஷல்ஸ்
உள்ளத்தை அள்ளித் தாவில் அழகிய லைலா... பாடல் மூலம் பரப்பரப்பாக அறிமுகமாகி நாட்டாமை மூலம் எல்லோரையும்திரும்பிப் பார்க்க வைத்தவர் சிற்பி.
பல படங்களில் மள மளவென புக் ஆன சிற்பி அதன் பிறகு விறுவிறுப்பு குறைந்து ஆளே காணாமல் போய் விட்டார். அதற்குப்பிறகு பல மியூசிக் டைரக்டர்கள் வந்து விட்டார்கள், இந்த அலையில் சிற்பி காணாமலேயே போய் விட்டார்.
தற்போது மீண்டும் சிற்பி களம் புகுகிறார். விக்ரமன் இயக்கும் புதிய படமான உன்னை நினைத்து படத்திற்கு சிற்பிதான் மியூசிக்போடுகிறார். இந்தப் படத்தின் மூலம் சிற்பி மீண்டும் பிசியாவார் என்கிறது கோடம்பாக்கம்.
அந்த அளவுக்கு படத்தின் கதையை விட மிக அருமையாக வந்திருக்கிறதாம் மியூசிக். விக்ரமன் கொடுத்த ஊக்கம் காரணமாகரொம்பவும் நிதானமாக யோசித்து பாடல்களுக்கு டியூன் போட்டிருக்கிறாராம் சிற்பி.
விக்ரமனின் இந்தப் புதிய படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்கிறார் (முதலில் விஜய் நடிப்பதாக இருந்தது. பல்வேறுகாரணங்களுக்காக அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார்). சூர்யாவுக்கு டபுள் ஜோடிகளாக சினேகா, லைலா ஆகியோர்வருகிறார்கள். !


Click it and Unblock the Notifications











