டிக் டாக் தடை.. தோனி.. எஸ்.கே, அனிருத், நெல்சன் அரட்டை.. என்னதான் இல்ல.. வெளியனது செல்லம்மா சாங்!

சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.

Recommended Video

Sivakarthikeyan adopted White Tiger | Vandalur Zoo, Doctor, Ayalaan

அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் 'இஷ்டத்துக்கு' வரிகளில் செம கலக்கலாக இயக்குநர் நெல்சனின் பொறுமலுடன் வெளியாகி இருக்கிறது "செல்லம்மா" பாடல்.

பாடலை விட மூன்று பேரும் வீடியோவில் செய்யும் அரட்டை நிச்சயம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பது நிச்சயம்.

சிவகார்த்திகேயனின் டாக்டர்

சிவகார்த்திகேயனின் டாக்டர்

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் இணைந்து வழங்கும் படம் டாக்டர். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

செல்லம்மா பாடல்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘செல்லம்மா' பாடல் இன்று மாலை வெளியாகும் என்ற அறிவிப்புகள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகின. இந்நிலையில், அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் பாடகி ஜோனிதா காந்தி குரலில் உருவான ‘செல்லம்மா' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இருக்கிறது.

மாஸ்க் அணிந்து

மாஸ்க் அணிந்து

இந்த லிரிக் வீடியோவுக்காக அனிருத் ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்ட இந்த லிரிக் வீடியோ ரசிகர்களுக்கு நிச்சயம் சிரிப்பை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்திருந்து, பின்னர், அடிக்கும் அரட்டைகளுக்கு இறுதி வரை எண்டே கிடையாது.

டிக்டாக் தடை

டிக்டாக் தடை

சமீபத்தில் சீன செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில், டாக்டர் படத்தில் டிக்டாக் தடையை வைத்தே சிவகார்த்திகேயன் பாடல் எழுத, அதற்கு அட்டகாசமாக ட்யூன் போட்டு பாடியும் கொடுத்துள்ளார் ராக்ஸ்டார் அனிருத். 'டிக்டாக் பேன்'மா என அசத்தலான வரிகளுடன், அனிருத்தின் சூப்பர் கூல் வாய்ஸ் அடுத்த ஹிட் பாடல் லிஸ்டில் இந்த பாடலையும் கேட்ட முதல் பொழுதிலே கொண்டு சேர்த்து விடுகிறது.

தோனி டச்

தோனி டச்

கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளுக்கு டக்கரான பர்த் டே ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் இசையமைப்பாளர் அனிருத். இந்நிலையில், இந்த பாடலில் ஏகப்பட்ட இடங்களில் தோனி பற்றிய வரிகளும் குறிப்புகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. அது நிச்சயம் இந்த பாடலை ஹிட்டாக்க உதவும் என்பதை தெரிந்தே சிவகார்த்திகேயன் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X