»   »  ஷங்கர் அடிக்கும் 'சிக்சர்'!

ஷங்கர் அடிக்கும் 'சிக்சர்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil


ஒரே நேரத்தில் ஷங்கர், 6 படங்களைத் தயாரிக்கப் போகிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மறுபக்கம் ரூ. 100 கோடி செலவில் உருவாக்கவுள்ள ரோபோட் படத்துக்கான கதை விவாதத்திலும் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

Click here for more images

சிவாஜி ஹேங் ஓவரிலிருந்து சட்டென வெளியே வந்து விட்ட ஷங்கர், தற்போது ஷாருக்கானை வைத்து ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தனது கனவுப் படமான 'ரோபோட்'டை மிகப் பிரமாண்டமாக உருவாக்கப் போகிறார். படத்தை ஷாருக்தான் தயாரிக்கிறார். இயக்கம் மட்டுமே ஷங்கர்.

இப்படத்துக்கான கதையை ஃைபன் ட்யூன் செய்யும் வேலையில் படு தீவிரமாக உள்ளார். மாமல்லபுரம் கெஸ்ட் ஹவுஸில் முகாமிட்டு இந்த வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.

அதே நேரம் ஒரே நேரத்தில் 6 புதிய படங்களை தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். தற்போது 'கல்லூரி' மற்றும் 'அறை எண் 305ல் கடவுள்' ஆகிய இரு படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.

இதுதவிர புதிதாக 6 படங்களைத் தயாரிக்கவுள்ளார். இதில் நான்கு கதைகளை ஓ.கே. செய்து விட்டாராம். அதற்கான பட்ஜெட்டும் கூட ஒதுக்கப்பட்டு விட்டதாம். நான்கில் ஒரு படத்தை வெயில் கொடுத்த வசந்தபாலன் இயக்குகிறார்.

6 படங்களுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது. ரோபோட்டை ஆரம்பித்த பின்னர் இந்தப் படங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், இந்தப் படங்களுக்கான பட்ஜெட்டையும் இப்போதே நிர்ணயித்து விட்டாராம் ஷங்கர். ரேபோட்டை ஆரம்பித்த பிறகு எதற்காகவும் இயக்குநர்கள் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அனைத்தையும் இப்போதே பக்காவாக பிளான் செய்து விட்டாராம்.

கிட்டத்தட்ட, ஷங்கரும் கூட ரோபோட் மாதிரி மாற ஆரம்பித்து விட்டார்!

Read more about: shankar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil